ஒரே மாதத்தில் அடுத்த ஒரு வெண்ணிலா கபடிகுழு நடிகர் மரணம் – 8 மாதமாக அவருக்கும் இப்படி ஒரு நோயாம்

0
863
mayisundar
- Advertisement -

கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி வெண்ணிலா கபடிக்குழு நடிகர் ஹரி வைரவன் காலமாகி இருந்த நிலையில் தற்போது அதே படத்தில் நடித்த மற்றொரு நடிகர் காலமாகி இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் வெண்ணிலா கபடிகுழு. இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும், இந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் ஹரி வைரவன். இவர் இந்த படத்தை தொடர்ந்து குள்ளநரி கூட்டம் போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த இவர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்துவந்த நிலையில் சமீபத்தில் காலமானார். ஹரி வைரவனின் இறப்பை தொடர்ந்து பல்வேரு திரைத் துறை பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக அவர் நடித்த வெண்ணிலா படக்குழு படத்தை இயக்கி சுசீந்திரன், அதே படத்தில் நடித்த சூரி, அப்புகுட்டி ஆகியோர் ஹரி வைரவன் இறப்பிற்கு தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.

- Advertisement -

ஆனால், உயிருடன் இருந்த போது உதவாமல் இப்படி இறந்த பின்னர் வருத்தம் தெரிவித்து என்ன பயன் என்று ரசிகர்கள் பலர் விமர்சித்தனர். இருப்பினும் நடிகர் விஷ்ணு விஷால் ஹரி வைரவன் சிகைக்காக பணம் உதவி செய்ததோடு அவர் இறப்பிற்கு பின்னர் அவரது பிள்ளையின் படிப்பு செலவை ஏற்று இருக்கிறார். ஹரி வைரவன் இறந்து ஒரு மாதம் கூட முடியாத நிலையில் தற்போது அடுத்த நடிகர் மரணம் அடைந்துள்ளார்.

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த மாயி சுந்தர் தான் தற்போது காலமாகி இருக்கிறார். தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த இவரது பெயர் சுந்தர். இவர் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானது சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி திரைப்படத்தின் மூலம் தான். இந்த திரைப்படத்திற்கு பின்னரே இவர் மாயி சுந்தர் என்று அழைக்கப்பட்டார்.

-விளம்பரம்-

இவர் தமிழில் ரன், துள்ளாத மனமும் துள்ளும், மிளகாய், வெண்ணிலா கபடி குழு போன்ற 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களாக இவருக்கு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் தனது சொந்த ஊரான மன்னார்குடியில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி என்று அவரது வீட்டில் காலமாகி இருந்திருக்கிறார்.

இவரது இறப்பிற்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் கூட இவர் பேட்டி ஒன்றில் பங்கேற்று பேசியிருந்தார் அதில் கொரோனாவால் படைப்பினைப்பு இல்லாததால் மிகவும் கஷ்டமாக இருந்தது ஆனால் இப்போது மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கியதால் மகிழ்ச்சியாக இருக்கிறது தற்போது என்று போன அடுத்த அடுத்த படங்களில் நடித்து வருகிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement