பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்னவ் தனது இன்ஸ்டாவில் பகிரும் பதவிகள் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இரண்டு வாரம் கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீட்டின் நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. பின் 24 மணி நேர எவிக்ஷனில் அதிக ஓட்டு பெற்று சாச்சனா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி பின் மீண்டும் வந்து விட்டார். பின் முதல் வாரத்திற்கான எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேறி இருந்தார். மேலும், நேற்று எபிசோடில் வழக்கம் போல் விஜய் சேதுபதி போட்டியாளர்களை வைத்து செய்தார்.
பிக் பாஸ் 8:
தர்ஷா- அர்னவ் பேசிய விஷயத்தை குறித்து விஜய் சேதுபதி பேசியிருந்தார். அப்போது அர்னவ் ஆண்கள் அணியை பற்றி தர்ஷாவிடம் பேசி இருந்ததற்கு தர்ஷாவும் ஒத்துக் கொண்டதால் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு பின் பிபி அவார்டுகள் குறித்து ஆண்களிடம் கேட்டபோது அவர்கள் எல்லா பட்டத்தையும் அர்னவுக்கு கொடுத்திருந்தார்கள். இதைப் பற்றி விஜய் சேதுபதி கேட்டதற்கு பெருமையாக இருக்கிறது என்ற அர்னவ் சொல்ல, இதில் என்ன உங்களுக்கு பெருமை என்று நக்கலாக பதில் அளித்து இருந்தார். கடைசியில் கடந்த வார பஞ்சாயத்து எல்லாம் முடிந்தவுடன் அர்னவ் வெளியேறினார்.
வெளியேறிய அர்னவ் பேசியது:
அர்னவ் வெளிவந்த பிறகு விஜய் சேதுபதி, உங்களுக்கு தோன்றிய கருத்தை housemates கொடுங்கள் என்று கேட்டதற்கு அர்னவ், ஜால்ரா பாய்ஸ். சத்யா, விஷால், தீபக் எல்லோருமே ஜால்ரா பாய்ஸ். டேய் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க. உங்களோட நான் பேசவில்லை என்பதற்காக நீங்கள் ஒரு டீம் சேர்ந்து என்னை ஒதுக்கி விட்டீர்கள் என்று பேசிக் கொண்டிருக்கிறார். உடனே விஜய் சேதுபதி குறுக்கிட்டு, எதற்கு அநாகரீகமாக பேசுகிறீர்கள். உங்களுடைய கருத்தை சொல்லுங்கள், வன்மத்தை கொட்டாதீர்கள். இப்படி எல்லாம் பேசக்கூடாது. உங்களுக்கு உள்ளேயே பேச வாய்ப்பு கொடுத்த போது அமைதியாக இருந்து விட்டு, இப்போது பேசக்கூடாது. அது ரொம்ப தவறு.
விஜய் சேதுபதி சொன்னது:
உங்களுடைய எலிமினேஷனுக்கு ஆண்கள் டீம் காரணம் கிடையாது. உங்களை நாமினேட் செய்தது பெண்கள்தான். ஓட்டு போட்டது வெளியில் இருந்த மக்கள். அதனால் நீங்கள் வெளியில் வந்ததற்கு ஆண்கள் டீம் எந்த விதத்திலும் காரணம் கிடையாது. போகும்போது கருத்து, அறிவுரை சொல்லி விட்டு போங்கள் தேவை இல்லாமல் பேச வேண்டாம் என்று முகத்தில் அடித்தது போல விஜய் சேதுபதி சொன்னவுடன் அர்னவ் எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டார். இதை பார்த்து நெட்டிசன்கள், அர்னவை கிண்டல் கேலி செய்து விமர்சித்து வருகிறார்கள்.
திருந்தாத அர்னவ்:
இந்நிலையில் தற்போது அர்னவ் பிக் பாஸில் இருந்து வெளியேறிய பிறகும் தனது வன்மத்தை இன்ஸ்டாகிராம் போஸ்டுகள் மூலம் காட்டி வருகிறார். அதில், ‘விஜய் சேதுபதி தான் அர்னவிடம் அட்வைஸ் பண்ற மாதிரி பேசாதீங்க. நல்லா அடிச்சு பேசுங்க’ என்று கூறியது போல் மீம் பகிர்ந்து உள்ளார். பின், தான் வெளியேறிய போது பேசிய அனைத்தையும் மீண்டும் மீம்கள் மூலம் பகிர்ந்து வருகிறார். தற்போது இந்த பதிவுகளை பார்த்து நெடிசன்கள், என்னது விஜய் சேதுபதி தான் பேச சொன்னாரா?, இன்ஸ்டாகிராமிடம் டிஸ்லைக் பட்டன் ஆட் பண்ணுங்க, இதையெல்லாம் உள்ளே இருக்கும் போதே சொல்ல வேண்டியது தானே, நீ ஒரு விஷம் என்று அர்னவை கமெண்ட்கள் மூலம் வறுத்தெடுத்து வருகிறார்கள்.