‘இவங்களுக்கு ஒரு மும்முடு’ – இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்

0
241
- Advertisement -

பிக் பாஸ் 8 நிகழ்ச்சியில் ஆறாவது வாரம் வெளியேறி இருக்கும் நபர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி ஆறாவது வாரம் இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. அதோடு முதல் நாளே பிக் பாஸ் வீடு நடுவே கோடு போடப்பட்டு ஆண்கள் ஒருபுறம், பெண்கள் ஒரு புறம் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதனால் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் சண்டை, கலவரம் தொடங்கி விட்டது.

- Advertisement -

பிக் பாஸ் 8:

இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பின் நான்காவது வாரம் எலிமினேஷன் நடக்கவில்லை. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 6 பேர் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்து இருந்தார்கள். அதில் மாடல் அழகி வர்ஷினி வெங்கட், சீரியல் நடிகர் ராயன், நடிகரும் மாடலும் ஆன ராணவ், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன், சுஜா வருணியின் கணவர் சிவக்குமார் ஆவார்.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

தற்போது போட்டியாளர்களுக்குள் சண்டை, போட்டி, பொறாமை, கலாட்டா கலவரம் என்று நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. போன வாரம் கடந்து வந்த பாதை டாஸ்கில் ஒவ்வொரு போட்டியாளருமே தங்களுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவங்களை குறித்து மனம் திறந்து பேசி இருந்தார்கள். பின் ஐந்தாம் வாரத்திற்கான நாமினேஷனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுனிதா வெளியேறி இருந்தார். இது பலருக்கும் ஷாக்கிங் தான்.

-விளம்பரம்-

நாமினேஷன் பட்டியல்:

மேலும், இந்த ஆறாவது வாரம் நடந்த கேப்டன்சி டாஸ்கில் அருண் பிரசாத் வென்று தலைவரானார். இந்த வாரம் பள்ளி டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் போட்டியாளர்கள் மாணவர்கள் மாறி கலாட்டா, கலவரங்கள் செய்திருந்தார்கள். வழக்கம்போல் போட்டியாளர்களுக்கு மத்தியில் சண்டை, சச்சரவுமே அதிகமாக இருந்தது.

வெளியேறும் நபர்:

இந்த நிலையில் இந்த வாரம் நடந்த நாமினேஷனில் தீபக், சௌந்தர்யா, சிவக்குமார், ராணவ், ரஞ்சித், சத்யா, ஜெப்ரி, வர்ஷினி, தர்ஷிகா, மஞ்சரி, சத்யா, ரியா, சாச்சனா ஆகியோர் பெயர் இடம் பிடித்து இருக்கிறது. இதில் குறைவான வாக்குகளை பெற்று ரியா தியாகராஜன் தான் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறார். இவர் நிகழ்ச்சியின் நுழைந்த ஆரம்பத்தில் இருந்தே ஸ்டேட்டர்ஜி, தனக்கு தான் தெரியும் என்று பேசுகிறார் என்று மற்ற போட்டியாளர்கள் குறை சொல்லிக் கொண்டிருந்தார்கள். இருந்தாலுமே ரியா தைரியமாக எல்லாத்தையும் பேசிக் கொண்டிருந்தார். பின் இவர் வெளியேறி இருப்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று தான்.

Advertisement