பிக் பாஸ் 8 வீட்டில் போட்டியாளர் சௌந்தர்யாவின் பெற்றோர்கள் செய்திருக்கும் விஷயம்தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 80 ஆவது நாள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சீசனில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, ரவீந்தர் தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வருகிறார். இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு டீவ்ஸ்டுகளுடன் பிக் பாஸ் நிகழிச்சி ஆரம்பமானது. அதன் பின் நிகழ்ச்சியை சுவாரசியம் ஆக்கும் வகையில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக வர்ஷினி வெங்கட், ராயன், ராணவ், மஞ்சரி, ரியா தியாகராஜன், சிவக்குமார் ஆகியோர் கலந்து இருந்தார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, வர்ஷினி, ரியா, சிவகுமார், ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, சத்யா, தர்ஷிகா, ரஞ்சித் ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 8 :
மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருவதால் போட்டியாளர்கள் மத்தியில் போட்டியும் பொறாமையும் வெடித்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் நடந்த டாஸ்கில் ராணவுக்கு தோள்பட்டையில் பயங்கரமாக அடிபட்டு இருந்தது. சிகிச்சைக்கு பின் ராணவ் மூன்று வாரத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொன்னதாக பிக் பாஸ் கூறியிருந்தார். இதை அடுத்து கேப்டன்சி டாஸ்க்கில் முத்துக்குமரன், பவித்ராவுக்காக விட்டுக் கொடுத்திருந்தார். இதனால் பிக் பாஸ் கேப்டன்சி டாஸ்கை ரத்து செய்து இருந்தார். இதனால் முத்துக்குமரன் மனமுடைந்து மன்னிப்பு கேட்டும் பிக் பாஸ் அதைக் கண்டு கொள்ளவே இல்லை.
https://www.youtube.com/watch?v=EMC9YrwIxxk
ப்ரீஸ் டாஸ்க் :
இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ப்ரீ டாஸ்க் நடைபெறுகிறது, அதாவது போட்டியாளர்களுடைய உறவினர்கள் உள்ளே வருகிறார்கள். அந்த வகையில் நேற்று தீபக், மஞ்சரி, விஜே விஷால் மற்றும் ராயன் குடும்பத்தினர் வந்திருந்தார்கள். அந்த வகையில் இன்று போட்டியாளர் சௌந்தர்யாவின் அப்பா, அம்மா மற்றும் சகோதரர் மூவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகை தந்திருக்கிறார்கள். மேலும், சௌந்தர்யாவின் குடும்பம் சிரித்துக் கொண்டே நீ இவ்வாறு செய்ததெல்லாம் சரியில்ல என்று சௌந்தர்யாவின் குறைகளை நேரடியாக சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
சௌந்தர்யாவின் அப்பா :
அப்போது சௌந்தர்யாவின் அப்பா, இன்னும் நீ கவனமாக விளையாட வேண்டும். நீ நிறைய விஷயங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். அன்பு, பண்போடு மதிக்கிற மாதிரி இருக்கணும். மீட்டிங் நடக்கும்போது கால் மேல கால் போட்டு உட்காருவதெல்லாம் நல்லா இல்ல. அதே மாதிரி மஞ்சுரியை கிண்டல் பண்ற விதம் சரியில்ல. கிடைத்திருக்கும் வாய்ப்பை நல்லா பயன்படுத்திக்கோ என்று கூறியுள்ளார். மேலும், சௌந்தர்யாவின் அம்மா, யாருக்காவது ஒரு பிரச்சனை என்றால் ஹெல்ப் பண்ணனும் என்று ராணவ் விஷயத்தை குறிப்பிடுவது போல் கூறியிருந்தார்.
Nalla family ♥️
— Pondattiye Thunai (@pondatiyethunai) December 25, 2024
Makkal solla nenachatha yellam avangale sollittanga 💥🔥🫡🫡#Soundariya sila vishayangala sari panna innum top la iruppanga 💥#BiggBossTamil8 #BiggBoss8Tamil #BiggBossTamil #BiggBossTamilSeason8pic.twitter.com/nHgy52a0J0
சௌந்தர்யாவின் சகோதரர் :
பின் சௌந்தர்யாவின் சகோதரர், நீதான் நான் ஸ்ட்ரைட் பார்வேர்ட் என்று சொல்றியே, பிரண்ட்ஸ் பின்னாடி எதுக்கு போய் பேசுற என்று சௌந்தர்யாவிடம் கேட்டு இருக்கிறார். யாராவது பேசுறதை அரைகுறையாக புரிந்து கொண்டு நீ ரியாக்ட் பண்ற. உனக்கு சுத்தமா பொறுமையே இல்ல. யாராவது சொல்ல வந்தா முழுசா கேளு. அதுக்கு தான் பிக் பாஸ் வந்திருக்க. யாராவது பேசினால் எதுக்கு இரிடேட் ஆகுற. யாராவது பேசினால் சந்தோஷமா பேசு. கேம் நல்லா விளையாடு. நீ தோற்றுவிட்டால் கூட மத்தவங்களை விளையாட விடு அவங்க முன்னாடி போய் டான்ஸ் ஆடிட்டு இருக்காத என்று எக்கச்சக்கமான அறிவுரைகளை சௌந்தர்யாவுக்கு குடும்பத்தினர் கூறியுள்ளார்கள். இதனால் சௌந்தர்யாவின் பெற்றோர்களை இணையவாசிகள் தற்போது பாராட்டி வருகிறார்கள்






