விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 9 நிகழ்ச்சி 91 நாட்கள் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் youtuber விக்கல்ஸ் விக்ரம், அரோரா சின்ச்லைர், கனி திரு, கம்ருத்தின், விஜே பார்வதி, ஆதிரை, பிரவீன்ராஜ் தேவசகாயம்,FJ(Fredrick Jhonson), சபரி நந்தன், வியானா,பிரவீன் காந்தி, அப்ஸரா சிஜே, வினோத் பாபு, துஷர், நந்தினி, சுபிக்ஷா, ரம்யா ஜோ, திவாகர், கலையரசன் என 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள். இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், வைல்ட் கார்ட்டில் திவ்யா கணேஷ், பிரஜன் மற்றும் சான்ட்ரா, அமித் ஆகியோர் உள்ளே போனார்கள். இதுவரை நிகழ்ச்சியில் இருந்து நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, திவாகர், கலையரசன், பிரவீன், துஷார், கெமி, ப்ரஜன்,ரம்யா, வியானா, எப் ஜே மற்றும் ஆதிரை, அமித், கனி, சுபிக்ஷா ஆகியோர் வெளியேறி இருந்தார்கள்.
பிக் பாஸ் 9:
கடந்த வாரம் டிக்கட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்றது. இந்த டாஸ்க்கில் அரோரா வெற்றி பெற்றிருந்தார்.
பின் இந்த நிகழ்ச்சியில் நடந்த கார் டாஸ்க்கில் போட்டியாளர்கள் பார்வதி- கம்ருதீன் செய்திருக்கும் செயல்தான் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருக்கிறது. சான்ட்ராவை காரில் இருந்து பார்வதி- கம்மு இருவரும் சேர்ந்து கால், கையில் தள்ளியும் உதைத்தும் கீழே தள்ளி விட்டிருக்கிறார்கள். இதை அங்கிருந்த மற்ற போட்டியாளர்கள் எல்லோருமே கடுமையாக கண்டித்து இருந்தார்கள்.

ரெட் கார்ட்:
இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையாகி இருக்கிறது. இது குறித்து பலருமே கண்டனம் தெரிவித்து வந்தார்கள். பின் விஜய் சேதுபதி, பார்வதி- கம்மு இருவருக்கும் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பி இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க ரெட் கார்டு வாங்கி வெளியேறுபவர்களுக்கு சில கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ரெட் கார்டு வாங்கினால் சம்பளம் கிடையாது என்று பிக் பாஸ் ஒப்பந்தத்தில் உள்ள ஒரு பொதுவான விதி என்று கூறப்படுகிறது. கம்ருதீன்- பார்வதி இருவருக்கும் இலட்சத்தில் சம்பளம் பேசப்பட்டிருந்தும் ரெட் கார்ட் வாங்கியதால் சம்பளம் கிடைக்குமா? என்பதை தெரியவில்லை.

போட்டியாளர் பேட்டி:
இந்த நிலையில் இது குறித்து பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர் அளித்த பேட்டியில், ரெட் கார்டு வாங்கினால் சம்பளம் என்று ஒரு பைசா கூட கிடையாது. காரணம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது தொடர்பாக முதலில் ஒரு அக்ரிமெண்ட் போடுவார்கள். அதில் இதைப் பற்றி தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். ரெட் கார்டு என்பது நிகழ்ச்சிக்கான விதிமுறைகளை மீறினால் தரப்படுகிறது தண்டனை அதனால் அந்த ரெக்கார்டு வாங்கி வெளியில் வந்தவர்களுக்கு சம்பளம் எதுவும் கிடையாது. அது மட்டும் இல்லாமல் வெளியேறிய பிறகு அந்த நிகழ்ச்சி தொடர்பாக நடக்கிற எந்த ஈவென்டிலும் அவர்கள் கலந்து கொள்ளவும் முடியாது. அந்த வீட்டுக்குள் இருந்த சமயத்தில் அவர்கள் வென்று வாங்கி இருந்த பரிசு பொருட்களை கூட தர மாட்டார்கள். தமிழ் பிக் பாஸில் இப்படி வெளியேறிய எல்லோருக்குமே இதுதான் நடந்தது என்று கூறியிருக்கிறார்






