பிக் பாஸ்ல வந்துட்டா சினிமா சான்ஸ் வந்துடாது – ஓப்பனாக பேசிய பிக்பாஸ் டைட்டில் வின்னர்

0
1397
aarav
- Advertisement -

டிவி நிகழ்ச்சியில் ஜெயித்தால் மட்டுமே சினிமா வாய்ப்புகள் தேடி வராது என்று நடிகர் ஆரவ் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்வ். இவர் முதல் சீசனில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தையும் வென்றிருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் இவர் ஓ காதல் கண்மணி, சைத்தான் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ். அதன் பின் இவர் மார்க்கெட் ராஜா MBBS என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். இந்த படத்தை சரண் இயக்கி இருந்தார். இதனை அடுத்து சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியிருந்த கழகத் தலைவன் என்ற படத்தில் ஆரவ் வில்லனாக மிரட்டி இருந்தார். இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி இயக்குகிறார்.

- Advertisement -

ஆரவ் திரைப்பயணம்:

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து இருக்கிறார். பிசாசு படத்தின் இசை அமைப்பாளர் அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்தது. பல எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து ஆரவ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ராஜ பீமா. இந்த படம் ரொம்ப நாட்களாகவே திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கின்றது.

ஆரவ் நடித்த படம்:

இதனை அடுத்து தற்போது ஆர்வ் நடித்து இருக்கும் படம் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன். இந்த படம் இன்று நேரடியாகவே ஓ டி டி தளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை தயாள் பத்மநாபன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சந்தோஷ் பிரதாப் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த படம் தொடர்பான பிரமோஷன் பணியில் ஈடுபட்டிருந்த போது ஆரவ் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்து இருந்தார்.

-விளம்பரம்-

ஆரவ் அளித்த பேட்டி:

அதில் அவர், சின்ன திரையில் ஜெயிப்பது வேறு. சினிமா துறையில் தன்னை நிரூபித்து ஜெயிப்பது வேறு. சினிமாத்துறை என்பது வியாபாரம் சம்பந்தப்பட்டது. ஒரு நடிகரின் வியாபாரத்தை வைத்து தான் தயாரிப்பு நிறுவனங்களில் இருந்து அவருக்கு அழைப்பு வரும். ஆனால், பிரபலமான டிவி நிகழ்ச்சிகள் ஜெயித்தால் மட்டுமே சினிமா வாய்ப்புகள் தேடி வந்து விடாது என்று கூறி இருக்கிறார்.

Advertisement