கடந்த செப்டெம்பரில் திருமணம், இந்த செப்டெம்பரில் சீமந்தம். ஆரவ்க்கு ரசிகர்கள் வாழ்த்து.

0
3795
aarav

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சீசன் ஆக இருந்து வருகிறது இந்த சீசனில் பங்குபெற்ற பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர் நடிகைகளாக ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் ஆரவ்வும் ஒருவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆரவ்.

ஆரவ் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ஓவியா இவர் மீது தீராத காதலில் இருந்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை ராஹி என்பவரை தான் ஆரவ் திருமணம் செய்து கொண்டுள்ளார் ஆரவ். நடிகை ராஹி, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இமை போல் காக்க’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் ஆரவ் மற்றும் ராஹியின் திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.

இதையும் பாருங்க : சூப்பர் சிங்கர் மளவிகாவிற்கு திருமணம் – வருங்கால கணவருடன் அவரே வெளியிட்ட புகைப்படம்.

- Advertisement -

இந்த திருமணத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சரண், ரஞ்சித் ஜெயக்கொடி, வருண், ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதே போல ஆரவ்வுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து பிந்து மாதவி, சக்தி, சினேகன், கணேஷ் வெங்கட் ராமன், ஆர்த்தி கணேஷ், காயத்ரி ரகுராம் சுஜா வருணி என்று பலர் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.

அதே போல பல்வேறு பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் ஆரவ்விற்கு வாழ்த்துக்களை தெரிவித்துவந்தனர். இப்படி ஒரு நிலையில் ஆரவ் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். இந்த செய்தியை கேட்டு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் திருமணம் முடிந்த நிலையில் இந்த செப்டெம்பர் மாதம் மனைவியின் சீமந்தத்தை முடித்து இருக்கிறார் ஆரவ்.

-விளம்பரம்-
Advertisement