விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
ஆரி, பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை இவருக்கு ஆதரவாக இருந்தது சனம் மற்றும் அனிதா தான். அவ்வளவு ஏன் ஆரி டைட்டில் வின்னர் ஆன போது கூட சனம் மற்றும் அனிதா தான் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். . சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய போது மக்கள் பலரும் சனம் ஷெட்டி வெளியேறியது நியாயமே இல்லை என்று கருத்து தெரிவித்தனர்.
இதையும் பாருங்க : கோடிகளில் மோசடி புகார் கூறிய ஜேசனை வச்சி செய்த Gosu – அதற்கு அவரின் பதிலை பாருங்க.
சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது ஆரி மற்றும் அனிதாவிடம் தான் நெருக்கமாக இருந்து வந்தார்.பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது கூட ஆரி பற்றி தான் பெருமையாக பேசி இருந்தார். அவ்வளவு ஏன் இறுதி போட்டிக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டிற்கு சனம் ஷெட்டி சென்ற போது ஆரியிடம் உங்களுக்காக தான் வந்தேன் என்று கூறி ஆரிக்கு முத்தம் கொடுத்தார் சனம்.
இப்படி ஒரு நிலையில் நேற்று சகோதர சகோதரிகள் கொண்டாடும் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு ஆரி வாழ்த்து சொல்லி ட்வீட் ஒன்றை போட்டார். அதற்கு சனம், ஆரிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு ஆரி, என் மீது நீங்கள் காட்டும் அன்பும் அக்கரைக்கும் மிகவும் நன்றி. என்னை நீ ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணரவைத்து இருக்கிறாய் என்று பதிவிட்டார்.
இதற்கு சனம் ஷெட்டி, உங்கள் தங்கையாக இருப்பது நான் செய்த அதிர்ஷ்டம். நீங்கள் சந்தோசமாகவும் நலமுடனும் வாழ கடவுள் உங்களை வாழ்த்துவார். உங்கள் கனிவான வாழ்த்துக்கு நன்றி என்று பாச மழையை பொழிந்து உள்ளார். இது ஒருபுறம் இருக்க நேற்று ஷிவானி மற்றும் பாலாஜி இருவரும் ஒருவருக்கு ஒருவர் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டது தான் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.