லோகி தான் கமல் வெறியர்னு பாத்தா விக்கியுமா – வெளியான காதுவக்குல ரெண்டு காதல் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ.

0
9114
kaathu
- Advertisement -

கடந்த 2்015்ஆம் ஆண்டு  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில்  விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்து வெளியான ‘நானும் ரவுடி தான்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது ‘காதுவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து உள்ளது இந்த கூட்டணி. இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. முதல் நாளில் நடிகர் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

பின்னர் கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புகள் தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூவரின் காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : ரக்சா பந்தனில் மாறி மாறி பாசத்தை பொழிந்த ஆரி – சனம். பாலா ஷிவானி கொடுத்துள்ள ஷாக்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில், கமலின் சத்யா படத்தில் வரும் ‘வளையோசி’ பாடலில் வருவது போல கமல் மற்றும் அமலாவை போல ஆடை அணிந்து கொண்டு விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் படியில் பயணம் செய்வது போல படமாகப்பட்டு இருக்கிறது.

Image

பொதுவாக லோகேஷ் கனகராஜ் தான் தீவிர கமல் ரசிகர், அவரது படங்களில் எல்லாம் நிச்சயம் கமலின் ரெபரென்ஸ் இருந்துவிடும். தற்போது அவர்,கமலை வைத்தே ‘விக்ரம்’ படத்தையும் இயக்கி வருகிறார். ஆனால், லோகேஷ் கனகராஜை போல விக்னேஷ் சிவனும் இப்படி கமல் ரெபரென்ஸ்ஸை வைத்து இருக்கிறார். இது ஒர்க் அவுட் ஆவுமா என்று படம் வெளியான பின் தான் பார்க்க வேண்டும்.

-விளம்பரம்-
Advertisement