சொந்த அறக்கட்டளை சார்பில் சாலையோர மக்களுக்கு உணவளித்த ‘பிக்பாஸ்’ ஆரி. எந்த ஊரில் தெரியுமா ?

0
531
aari
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் தமிழகத்தில் தற்போது இந்த வைரஸ் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது.  கொரோனா பிரச்சனை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-
vdgdsb

அதிலும் கூலி வேலை செய்பவர்கள், ரோட்டோரம் வசிக்கும் மக்கள் என்று பலர் அன்றாட உணவிற்கே கஷ்டப்பட்டு வருகின்றனர். அவ்வாறு கஷ்டப்பட்டு வரும் மக்களுக்கு பல்வேரு தன்னார்வலர்களும் சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். அந்த வகையில் நடிகரும் பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளருமான ஆரி அன்னதானம் வழங்கியுள்ளார்.

- Advertisement -

நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்தவர்.நடிகர் ஆரி அவர்கள் சினிமா தவிர சென்னை வெள்ளம்,ஜல்லிக்கட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை போன்ற அனைத்து சமுதாய பிரச்சனைக்கும் முன்னின்று குரல் கொடுத்தவர்.

அதுமட்டும் இல்லாமல் இவர் கடந்த சில ஆண்டுகளாக மாறுவோம் மாற்றுவோம் என்ற ஒரு அறக்கட்டளையை நிறுவி வருகிறார். இந்த அறக்கட்டளை சார்பில் பல்வேரு உதவிகளை செய்து வருகிறார் ஆரி. இப்படி ஒரு நிலையில் இந்த அறக்கட்டளை சார்பாக  நேற்று (10.06.2021) திருவண்ணாமலை கிரிவலப் பாதையைச் சுற்றியுள்ள மக்களுக்கு அன்னதானம் வழங்கினார். ஊரடங்கு காலத்தில் திருவண்ணாமலையில்  கிரிவலப் பாதையைச் சுற்றியுள்ள சாலையோரம் வசிக்கும் 100 பேருக்கு நேற்று தன் ‘மாறுவோம் மாற்றுவோம்’ அறக்கட்டளையின் மூலம் ஆரி அர்ஜுனன்  உணவு அளித்தார்.

-விளம்பரம்-

Advertisement