ஆரி எப்படி இப்படி இருக்காரு ? – ஆரி குறித்து ஜேம்ஸ் வசந்தன் போட்ட நீளமான பதிவு.

0
73390

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 11 வாரங்கள் நிறைவுசெய்து 12வது வாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஆரியும் ஒருவர். நெடுஞ்சாலை படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட ஆரி அதன்பின்னர் நடித்த படங்கள் அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. இருப்பினும் இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். தற்போது இவர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் அது குறித்து பிரபல தொகுப்பாளரும் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் ஆரி குறித்து தனது முகநூலில் நீளமான பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.

அதில், ஆரி தான் டைட்டில் வின்னர், அது வேறு விஷயம். ஆனால், இந்த இவர் எல்லா திசைகளிலிருந்தும் இதுபோன்ற பகைமையை எவ்வாறு நிர்வகிக்கிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எல்லோரும் உங்களை வெறுக்கிறார்கள், உங்களை ஏமாற்றுகிறார்கள், உங்களை குற்றம் சாட்டுகிறார்கள், உங்களுக்கு எதிராக சதி செய்கிறார்கள். உங்கள் இடத்தில் என்னை நினைத்துக் கூட பார்க்க முடியாது. கடந்த 75 நாட்களாக இவற்றையெல்லாம் எதிர்கொண்ட போதிலும், அவர் இன்னும் தகுதிகள் குறித்து விவாதித்து வருகிறார். அவர் பிரச்சினைகளைத் தாக்குகிறார், ஆனால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் அவரை தான் தாக்குகிறார்கள்.

இதையும் பாருங்க : இன்னுமும் பீட்டர் நம்பரை வைத்திருக்கும் வனிதா – மீண்டும் காதலில் இருப்பதாக போட்டதற்கு காரணம் இது தானாம்.

- Advertisement -

வீரர்கள் பூட்டப்பட்டிருக்கும், வழக்கமான உலகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒரு வீட்டில், உணர்ச்சிகள் கொதிக்கின்றன, ஈகோக்கள் பெருகும், சுயமரியாதை போராட்டம் மற்றும் உங்கள் எண்ணங்கள் மற்றும் செயல்களில் நீங்கள் முரணாகி விடுகிறீர்கள், மேலும், அதனை முடிக்க உங்கள் பாதை பல்வேறு பகுதிகளிலிருந்தும் அச்சுறுத்தல் காரணமாக இருண்டதாகத் தெரிகிறது. எல்லோரும் தங்கள் சொந்த திட்டங்களையும் உத்திகளையும் கண்டால், இந்த பையன் எஃகு மனிதனைப் போல நிற்கிறான். சிலருக்கு இது சுலபமாகத் தோன்றலாம், ஆனால், எனக்கு இது சரியாக தான் தோன்றுகிறது.

இது ஒருபுறம் இருக்க ஜேம்ஸ் வசந்தன் சனம் ஷெட்டி வெளியேறிய போதே தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், சனம் வாக்களிப்பால் வெளியேறினாரா? திட்டமிட்டு அனுப்பப்பட்டாரா? இது எல்லார் மனதிலும் எழுந்திருக்கிறக் கேள்வி! பலருக்கு சந்தேகமே இல்லை.. இது சதிதான் என்று அடித்துச் சொல்கிறார்கள்.நான் பார்த்த, விசாரித்த, ஆய்வுசெய்த வகையில் அவருக்கு மக்களிடம் பெருத்த ஆதரவு இருக்கிறது என்பது மட்டும் தெளிவாகியது. பின் ஏன் அனுப்பப்பட்டார்? என்ன காரணம்? தயாரிப்பாளர்களுக்கு என்ன வியூகம், நோக்கம் என்பது விளங்கவில்லை.ஆனால், அவர் எப்படி பெரும்பான்மை பார்வையாளர்களைக் கவர்ந்தார் என்பதுதான் என் கண்ணோட்டம்.தொடக்கத்தில் நான் இந்நிகழ்ச்சியைப் பார்க்காததால் எனக்கு ஆரம்ப நிகழ்வுகள் தெரியாது. ஆனால் மக்களால் அவர் வெறுக்கப்பட்டார், சண்டைக்காரி என்கிற சாயல் அவர்மேல் படிந்தது என்பதை மட்டும் விளங்கிக்கொண்டேன்.ஆனால் வாரங்கள் போகப்போக, அவருடைய நிலைப்பாடு மக்களுக்கு விளங்கத் தொடங்கியது.

-விளம்பரம்-
Advertisement