மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஆர்த்தி – ட்விட்டர் மூலம் விளக்கம்

0
2518

சினிமாவில் பல வருடங்கள் காமெடி நடிகையாக நடித்து வருபவர் ஹார்த்தி. சமீபத்தில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் இவரும் ஒருவர்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது இவரும் ஜூலியும் தான் எலியும் பூனையாக சண்டை போட்டுக்கொள்வார்கள். பிக் பாஸ் வீட்டை விட்டு யார் கடைசியில் வெளியே போவது என இருவருக்கும் போட்டி வேறு இருந்தது.

எப்பொடியோ இதில் முதலாக வெளியே பஃன ஆர்த்தியால் ஜூலி வெற்றி பெற்றார். வேளியே போனதும் மீண்டும் கெஸ்டாக மீண்டும் வீட்டுக்குள் வந்தார் ஆர்த்தி. அப்போது தனது தலையை மொட்டை அடித்து விட்டு விக் வைத்து வந்திருந்தார்.

மேலும், கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக அவர் மொட்டை அடித்துக்கொண்டு உதவியதாக தெரிவித்தார். இந்நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது முனங்காலில் சவ்வு கிழிந்துள்ளதால் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.