அன்று ராஜ் டிவி ஆங்கர், இன்று விஜய் டிவி நடிகர் – யார் இந்த பாக்கியலக்ஷ்மி சீரியல் புதிய செழியன் விகாஷ்.

0
858
- Advertisement -

சமீப காலமாக மக்கள் அனைவரும் சின்னத்திரையை விரும்பிப் பார்த்து வருகிறார்கள். இதனால் வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. அந்த வகையில் சின்னத்திரையில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் விஜே விகாஸ். இவர் வேற யாரும் இல்லைங்க, நம்ம பாக்கியலட்சுமி தொடரில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் விகாஷ். ஆனால், இதற்கு முன்னாடி இவர் ஆங்கரிங்காக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவர் முதன் முதலில் ராஜ் டிவி மூலம் மீடியா உலகில் நுழைந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சேனல்களில் ஆங்கரிங் செய்து இருக்கிறார். அதனால் இவருக்கு தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. தற்போது இவர் சன் டிவி, விஜய் டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பாகும் தொடர்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்நிலையில் இவரிடம் சமீபத்தில் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் ஆங்கரிங்கில் இருந்து ஆக்டராக மாறிய கதையை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் என்னுடைய படிப்பை முடித்ததும் மீடியாவுக்கு போகப் போகிறேன் என்று சொன்னதும் எந்த தடையும் என்னுடைய குடும்பம் சொல்லவில்லை. எனக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். ராஜ் டிவியில் தான் நான் முதலில் ஆடிசனுக்கு போயிருந்தேன். அங்கு 57 பேர்கள் கலந்து கொண்ட ஆடிஷனில் நானும் ஒருவன். அங்கு என்னை ரெண்டு நிமிஷம் பேச சொன்னார்கள். பின் அங்கிருந்த 57 பேரில் ஒருத்தர் தான் செலக்ட் பண்ணினார்கள். அப்படித்தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

- Advertisement -

விகாஷ் அளித்த பேட்டி:

அதற்கு பிறகு விஜய் டிவியில் ஆங்கரிங் வாய்ப்பு கேட்டு போயிருந்தேன். அங்கே என்னை பார்த்துட்டு நீ நடிக்க வந்துடு, உனக்கு நாளை சூட்டிங் என்று சொன்னார்கள். அப்படி தான் எனக்கு சீரியல் நடிக்க வாய்ப்பு வந்தது. நீலி என்ற தொடரில் நான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தேன். அந்த தொடர் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. மக்கள் மத்தியிலும் நான் நடிகராக பரிச்சயமானேன். அதோடு அந்த தொடருக்காக சிறந்த வில்லன் என்ற விருதும் எனக்குக் கிடைத்தது. ஆங்கரிங்கில் இருந்து நடிக்க வந்ததால் எனக்கு ஆரம்பத்தில் பதட்டமாகவும், என்ன செய்வது என்று குழப்பத்திலும் இருந்தேன்.

சீரியல் வாய்ப்பு கிடைத்த அனுபவம்:

சூட்டிங்கில் என்னை சுற்றி பெரிய மனிதர்கள் எல்லோரும் இருந்தார்கள். அவங்க சொல்ற சீன் எனக்கு . நடிக்கவே தெரியவில்லை எல்லார் முன்னாடியும் திட்டினார்கள். மறுபடி மறுபடி நடித்து கொண்டே இருந்தேன். சீரியலில் பஸ்ட் ஷார்ட் என்று சொல்லுவார்கள். அப்படி பஸ்ட் சாட்டில் ஓகே பண்ண எனக்கு ஆறு மாதம் ஆனது. அப்ப என்னுடைய நண்பர் ஒருத்தர் உனக்கு வராது இல்ல, தெரியாது. தெரிஞ்சிட்டு நடி என்று சொன்னார். அவமானங்களை எல்லாம் பெருசாக எடுத்துக்காமல் அவர் சொன்னதை புரிந்து கொண்டும், கற்றுக்கொண்டும் நடிக்க ஆரம்பித்தேன். அதுமட்டும் இல்லாமல் திட்டி அவர்களே என்னை பார்த்து பாராட்ட ஆரம்பித்தார்கள்.

-விளம்பரம்-

ஹீரோவாக நடிக்க ஆசை இல்லை:

எனக்கு ஹீரோவாக நடிக்க ஆசை எல்லாம் இல்லை. ஏன்னா, ஹீரோவாக நடிக்கும் போது ஒரே மாதிரி தான் நடிக்க வேண்டி இருக்கும். அதுவே கேரக்டர் தேர்ந்தெடுத்து நடிக்கும் போது பல கோணங்களில் நம்முடைய நடிப்பு திறமையை வெளிக்காட்ட முடியும். ஹீரோவாகத்தான் வெற்றியடைய முடியும் என்பதெல்லாம் இல்லை கதைக்கு ஏற்றவாறு ஹீரோவாக நடிப்பின் மூலம் வெற்றி அடையும். நான் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் இன்னும் நடிக்கவில்லை. சீக்கிரம் அப்படியான ஒரு கதாபாத்திரம் நடிக்கணும்னு விரும்புகிறேன். சீரியலில் இருக்கும்போது சினிமாவிலும் வாய்ப்பு வந்தது.

பாக்யலக்ஷ்மி தொடரில் செழியன்:

அங்கேயும் பிடித்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து இருந்தேன். இப்போது நான் பாக்கியலட்சுமி தொடரில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் இந்த தொடரில் நடிக்க பாடி ஷேவிங் பண்ணினார்கள். ஆரியன் மாதிரி அவர் இல்லை என்று வெளிப்படையாக கமெண்ட் பண்ணினார்கள். இப்ப நானும் வெயிட் லாஸ் பண்ண ஆரம்பித்து இருக்கிறேன். வேறு ஒருவரை செழியன் பார்த்துட்டு டக்குனு என்னை பார்ப்பதற்கு ஆடியன்சுக்கு நேரம் ஆகும். இது சகஜமான ஒன்று. இப்ப கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் என்னை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து இருக்கிறார்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Advertisement