இரண்டு வருடத்திற்கு முன்னர் திட்டிய நபருக்கு தனது பிறந்தநாளில் பதில் அளித்த ஆர்த்தி.

0
73531
aarthi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றிருந்தது மூன்று சீசன்கள் கடந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசன் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீசனாக இருந்து வருகிறது. முதல் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்களும் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான ஆர்த்தியும் ஒருவர். நகைச்சுவை நடிகை ஆர்த்தி கணேஷ்கரை நாம் அனைவரும் அறிவோம்.

-விளம்பரம்-

பல படங்களில் வடிவேலு, விவேக் போன்ற காமெடி நடிகர்களுடன் நடித்துள்ளார். இடையில் பட வாய்ப்புகள் குறைந்தாலும், கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ- என்ட்ரி கொடுத்திருந்தார் ஆர்த்தி. ஆர்த்தி என்றதும் நம் நினைவில் முதலில் வருவது இவரது குண்டான தோற்றம் தான். ஆரம்பத்தில் ஆர்த்தி சற்று அளவான உடலில் தான் இருந்தார். ஆனால், உடல் எடை கூறைக்கின்றேன் என்று இவர் எடுத்த சில முயற்சிகளால் இவரது உடல் எடை மேலும் அதிகரித்துவிட்டது.

இதையும் பாருங்க : விஜய்யின் ‘தளபதி 64’ படத்தில் இணைந்த விஜய் டிவி தொகுப்பாளினி. செம குஷியில் இருக்கார்.

- Advertisement -

நடிகை ஆர்த்தி பொதுவாக தனது உருவத்தை யாராவது கிண்டல் செய்தாலும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது அதே போல மற்றவர்கள் கலாய்ப்பதற்கு முன்பாக தனது உருவ அமைப்பை தானே கலாய்த்து புகைப்படத்தை பதிவிட்டு விடுவார் ஆர்த்தி. இந்த நிலையில் நடிகை ஆர்த்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் ஆர்த்திக்கு ரசிகர்கள் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் தனித்தனியாக நன்றி தெரிவித்து வருகிறார் ஆர்த்தி.

https://twitter.com/RaveThala/status/1192906407604998144

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்த்தியின் பிறந்தநாளின் போது தளபதி என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து விஜய் ரசிகர் ஒருவர் ‘நீயெல்லாம் எதுக்கு பொறந்த கும்கி’ என்று மோசமாக ட்வீட் செய்திருந்தார். ஆனால், அப்போது அந்த வீட்டுக்கு பதிலளிக்காத ஆர்த்தி இரண்டு வருடங்கள் கழித்து தற்போது அந்த நபருக்கு ‘உங்கள மாதிரி 420 கேடிய அடக்கத்தான்’ என்று பதிலளித்துள்ளார். ஆர்த்தியை திட்டிய அந்த விஜய் ரசிகரை ரசிகர்கள் தற்போது கழுவி ஊற்றி வருகிறார்கள்

-விளம்பரம்-
Advertisement