முகென் காதலியிடம் நான் பேசப்போகிறேன்.! அபிராமி அளித்த ஷாக்கிங் பேட்டி.!

0
33784
abhirami

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில் அடுத்த நாளே அபிராமி வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார்.

abhirami

அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார். அபிராமி இருந்த வரை முகென் அவரை காதலிக்கவில்லை என்று ஆணித்தனமாக கூறியிருந்தார். ஆனால், அபிராமி வெளியே சென்றதும் அவர் உடைத்து சென்ற மெடலை ஓட்ட வைத்துக்கொண்டு இருந்தார் முகேன். மேலும், முகெனுக்கு நதியா என்ற ஒரு காதலி இருப்பதாகவும் அபிராமியிடம் கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : கடற்கரையில் போட்டோ ஷூட் நடத்திய பிரியா ஆனந்த்.! நம்ம பாண்டா பண்ண கமெண்டை பாருங்க.! 

- Advertisement -

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபிராமி பேசுகையில், சமூக வலைதளங்களில் என்னை பற்றியும் முகெனை பற்றியும் எவ்வாறு மிகைப்படுத்தப்படும் என்பதைப் பற்றி அந்தப் பெண்ணுடன் பேச விரும்பினேன். ஒரு நபராக முகன் எவ்வளவு நல்லவர் என்று அவளிடம் சொல்லவிரும்புகிறேன் . ஆனால் முகன் என்னிடம் சொன்னதைப் பொறுத்தவரை, அவர்கள் இன்னும் ஒரு உறவில் இல்லை.

Image result for mugen rao lover

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பு அவர் அவளை முன்மொழிந்தார். அது ஒரு உறவு கூட இல்லை, அவள் இன்னும் அவன் காதலி கூட இல்லை. எனவே, அதனுடன் கூட தொடர்பில்லாத ஒருவரிடம் பேசுவதன் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. அவர் வந்து பேசுவதற்காக நான் காத்திருக்கிறேன், அவர்கள் உண்மையிலேயே ஒரு உறவில் இருந்தால், அவர்களுக்கு அந்த புரிதல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement