ஊரடங்கு முடிந்ததும் இவன் ஜெயிலில் இருப்பான். டிக் டாக் நபரின் புகைப்படத்தை வெளியிட்டு அபிராமி சபதம்.

0
12532
abhirami
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகென் ராவ். இந்த சீசனில் காதல் காவியங்கள் கொடிகட்டி பறந்தது. அதில் முதன் முதலில் அபிராமி தான் காதலை தொடங்கி வைத்தவர். அபிராமி முதலில் கவினின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால்,கவின் கொஞ்சம் கூட அபிராமியை கண்டுகொள்ளவில்லை. பின்னர் கவினை கடுப்பு ஏற்றுவதற்காக தான் முகென் உடன் பழகினார். முதலில் நண்பனாக பழகினார் அபிராமி. பின் அவர் மீது அதுவே காதலாக மாறிவிட்டது.

-விளம்பரம்-

நாட்கள் செல்ல செல்ல முகென் மீது வைத்திருந்த அன்பு, பாசம் அனைத்தும் காதலாக மாறிவிட்டது என்று அவர் கூறியிருந்தார். அது மட்டும் இல்லைங்க கமலஹாசன் அவர்கள் போட்டியின்போது ஹீரோ யார்? வில்லன் யார் ?என்ற டாஸ்க் வைத்திருந்தார், அதில் அபிராமி கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னுடைய ஹீரோ முகென் தான் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

இதையும் பாருங்க : பட வாய்ப்புகள் இல்லாததால் தினமும் கிளாமர் புகைப்படங்களை அள்ளி வீசி வரும் நடிகை.

- Advertisement -

ஆனால், முகென் ஏற்கனவே அபிராமிடம் நண்பனாக தான் பழகுகிறேன் என்று கூறினார். மேலும்,அபிராமி தன்னிடம் பழகுவது குறித்து முகென் கூறியது, நான் ஏற்கனவே நதியா என்ற பெண்ணை காதலித்து வருகிறேன். ஆனால், அப்போதும் அபிராமி, முகெனை விடுவதாக இல்லை. மேலும் ,பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் எங்கள் காதல் குறித்து பேசுவோம். அதுமட்டுமில்லாமல் எங்கள் வாழ்க்கை குறித்தும் நாங்கள் இருவரும் பேசி உள்ளோம் என்று கூறினார்.

இவ்வளவு பொறுமையாக முகென் எடுத்துச் சொல்லியும் அபிராமி ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் வீட்டை விட்டு வெளியேறும் வரை தீவிரமாக முகெனை காதலித்துக் கொண்டுதான் இருந்தார். கடந்த பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு முகென், நதியாவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு காதலை உறுதி செய்தார்.ஆனால், அபிராமி டிக் டாக் வீடியோ ஒன்றில் முகெனின் வீடியோ ஒன்றை பதிவிட்டு ‘ஐ லவ் யூ பேபி’ என்று குறிப்பிட்டிருந்தார்.

-விளம்பரம்-
Popular Bigg Boss Tamil 3 star deletes her original tik tok account due to fake accounts | Abhirami Venkatachalam

இதையும் பாருங்க : சிறையில் மாஸ்க் தயாரிக்கும் நண்பன் பட நடிகர். யார் தெரியுமா ?

அந்த வீடியோயோ சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் அது தன்னுடைய பெயரில் இயங்கி வரும் போலி கணக்கும் என்று கூறியுள்ள அபிராமி, இதனால் அபிராமி தன்னுடைய டிக் டாக் கணக்கை டெலிட் செய்துவிட்டார். மேலும் தன்னுடைய பெயரில் பல்வேறு போலி கணக்குகள் உருவாகி வருவதால் தன்னை பலரும் தவறாக பேசுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள அபிராமி, ஊரடங்கு உத்தரவு முடிந்தபின்னர் இதற்கு காரணமான நபர் மீது காவல் துறையில் புகார் அளித்து அவரை நான் உள்ளே தள்ளுவேன் என்று சபதம் எடுத்துள்ளார் அபிராமி.

Advertisement