மீண்டும் சாக்க்ஷியை எச்சரித்த அபிராமி.! அதற்கு சாக்க்ஷியின் பதிலடியை பாருங்க.!

0
55969

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வருகிறார் நடிகை அபிராமி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார். அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார்.

அபிராமி இருந்த வரை முகென் அவரை காதலிக்கவில்லை என்று ஆணித்தனமாக கூறியிருந்தார். ஆனால், அபிராமி வெளியே சென்றதும் அவர் உடைத்து சென்ற மெடலை ஓட்ட வைத்துக்கொண்டு இருந்தார் முகேன். அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் அபிராமி பல்வேறு போட்டியாரல்களின் குடும்பத்தினரை சந்தித்து வந்தார்.

இதையும் பாருங்க : இவர்கள் தான் எனக்கு பிடித்த போட்டியாளர்கள்.! பொது மேடையில் கூறிய முன்னாள் வெற்றியாளர் ஆரவ்.!

- Advertisement -

இந்த நிலையில் அபிராமியின் நடவடிக்கையினால் கடுப்பான சாக்க்ஷி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிக்பாஸில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மற்ற போட்டியாளர்களை சந்தித்து அவர்களிடம் தவறான கருத்துக்களை பரப்புவதை முதலில் நிறுத்துங்கள். நீங்கள் அவர்களை சந்தித்து பேசும்போது நல்ல விஷயங்களையும் அவர்கள் வாழ்வில் முன்னேற அவசியமான கருத்துக்களையும் பற்றி கூறுங்கள். அதுவும் பிக் பாஸ் வீட்டில் உங்களுக்கு யார் உறுதுணையாக இருந்தார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். சுயநலமாக எண்ணாமல் இருங்கள் என்று அந்த பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனால் கடுப்பான அபிராமி, பிக்பாஸ் குறித்து கேள்வி கேட்பதை நிறுத்துங்கள் அதை விட்டு நான் வெளியே வந்துவிட்டேன். தற்போது படப்பிடிப்பிலும் எனது வேலையிலும் கவனம் செலுத்தி வருகிறேன். தற்போது சந்தோஷமாக இருக்கிறேன் எனவே, பிக்பாஸ் பற்றி எதுவும் எனக்குத் தேவையில்லை என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் அபிராமி மீண்டும் சாக்க்ஷியை மறைமுகமாக பேசி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய ரசிகர்களை திட்டினாள் நாள் எரித்துவிடுவேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்,பொறாமை பிடித்த நபர்களை எப்படி கையாள வேண்டும் என்று எனக்கு டிப்ஸ் கொடுங்கள் நீங்கள் தான் என்னை வெறுக்கும் வகையில் மெசேஜ் செய்திருந்தார்கள் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும் நீங்களா நேர்மையை பற்றி பேசுகிறீர்கள் என்று சாக்க்ஷி பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement