பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சேரனுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.! வாழ்த்து சொல்லும் ரசிகர்கள் .!

0
40879
cheran
- Advertisement -

சேரன் அவர்கள் தென்னிந்தியா தமிழ் திரைப்படத் துறையில் பல சாதனைகளை புரிந்து உள்ளார். இவர் தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும்,தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவருடைய மூன்று திரைப்படங்கள் தேசிய விருதையும் பெற்றுள்ளது .அது வெற்றிகொடிகட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து ஆகிய படங்கள் தான் . மேலும், இவர் சினிமா துறையில் பல படங்களை இயக்கியும் அதிலே நடித்தும் கூட உள்ளார்.சேரன் அவர்கள் மதுரை மாவட்டம் மேலூரில் கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை திரையரங்கத்தில் படம் ஓட்டுநராக வேலை புரிந்தவர். தாயார் பள்ளி ஆசிரியை ஆவார். இவருக்கு சிறு வயதிலேயே நாடகங்கள் நடிப்பதில் மிகுந்த ஆர்வமுடையவர்.

-விளம்பரம்-

மேலும்,2011ம் ஆண்டு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தலில் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திரைப்படங்களில் வாழ்க்கையை தொடர சென்னைக்கு வந்தார் ஆரம்பத்தில் அவர் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார்.பின் இயக்குனராகவும் பணியாற்றினார்.இவர் நாட்டுப்புற மக்களின் அடிப்படை வாழ்க்கையை எடுத்துக் கூறுவதிலும் வல்லவர். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சில ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக சேரன் பங்கு பெற்றார். மேலும், தன்னுடைய விடாமுயற்சியாலும் நம்பிக்கையாளும் 90 நாட்கள் அந்த வீட்டில் இருந்து வந்தார். இதுவரை அந்த பிக்பாஸ் வீட்டில் வயது அதிகம் உள்ள போட்டியாளர்கள் இவ்வளவு நாட்கள் இருந்ததில்லை என்ற ரெக்காடை முறியடித்து விட்டார்.

- Advertisement -

மேலும், கடந்த வாரம் சேரன் அவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சேரனுக்கு நிறைய ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது என்று கூட சொல்லலாம். மேலும்,பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் அவர் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் வகையில் அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து டைரக்டர் தனஞ்ஜெயன் அவர்கள் ‘வெல்கம் பேக்’ சேரன் சார், நீங்கள் உங்களுடைய முழு முயற்சியை கொடுத்தீங்க என்னுடைய வாழ்த்துக்கள் சார். மேலும் உங்களுக்கான அடுத்த பணி காத்துக் கொண்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார். இதற்காக சேரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது, நான் சொன்ன மாதிரி பிக்பாஸ் வீட்டில் இருந்தனா , இல்லையான்னு எனக்குத் தெரியல.

என்ன பொறுத்தவரை வெற்றி, தோல்வி எல்லாத்தையும் தாண்டி இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்தது எனக்கு ஒரு புது விதமான அனுபவமாக இருந்தது. இந்த உலகத்தில் நாம் நாமாக இருப்பது ரொம்ப கஷ்டமான விஷயம். அந்த விஷயத்தை தந்தது பிக்பாஸ். இந்த தருணத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு நன்றி தெரிவிக்கிறேன்.நாம் என்ன தான் நாமாக இருந்தாலும் நம்மை சுற்றியுள்ள சூழல் நம்மை அந்த மாதிரி வாழ விடாது. அதையும் தாண்டி வாழ்ந்தால் நம்முடைய அதிர்ஷ்டம் என்றும் கூறினார். இந்த வகையில் நான் பிக் பாஸ் வீட்டில் இருந்த இந்த 90 நாட்கள் ரொம்ப பாக்கியம் செய்தவன் என்று பெருமையுடன் கூறினார். மேலும், சேரன் அவர்கள் டைரக்டர் தனஞ்ஜெயன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அடுத்தகட்ட பணிக்கு நான் தயாராக உள்ளேன் என்றும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement