பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்து சீசன்கள் தான் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறி வந்தது. அதில் பங்குபெற்ற மீரா மிதுன் தான் பல்வேறு சர்ச்சைகளை தேடித்தேடி தன்மீது போட்டுக்கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே மாடல் அழகி என்ற பெயரில் பல்வேறு பெண்களுடன் பணத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக இவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. மேலும், பிரபல மாடல் நிறுவனத்தின் உரிமையாளர் ஜோ மைக்கல் என்பவர் மீராமிதுன் குறித்த பல்வேறு சரியான விஷயங்களை கூறி வந்தார். மேலும், மீரா மிதுன் மேல் இருக்கும் இருக்கும் குற்றச்சாட்டுகள் விரைவில் நிரூபிக்கப்பட்டு அவர் சிறை தண்டனை பெறுவர் என்றும் அறிவித்திருந்தார் .ஆனா,ல் அதற்குள்ளாகவே மீரா பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக நுழைந்துவிட்டார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் மீராமிதுன் நுழைந்த முதல் நாள் முதலே அபிராமி மற்றும் சாக்ஸி இருவரும் மீராமிதுனை மிகவும் பங்கமாக கலாய்த்திருந்தார்கள். மேலும், இவர்கள் இருவரும் மீராமிதுனை நடத்திய விதத்தை வைத்துக்கொண்டே இவர்களுக்கும் மீரா மீதுனிற்கும் பிக்பாஸ் வீட்டிற்குள் வெளியே ஏதோ ஒரு வன்மம் இருப்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. அதனை ஒரு கட்டத்தில் கூறியிருந்த அபிராமி, மீரா மிதுன் ஒரு பிராடு என்றும், அவர் பல்வேறு பெண்களை ஏமாற்றி உள்ளார் என்றும், தனது தோழிகள் சிலர் கூட மீராமிதுன் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றி உள்ளார் என்றும் அபிராமி கூறியிருந்தார். அதேபோல சாக்க்ஷியும், மீராமிதுன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இதையும் பாருங்க : வனிதா இல்லாமல் புகைப்படத்தை பதிவிட்ட அருண் விஜய்.. மனம்நொந்து வனிதா சொன்ன விஷயத்தை பாருங்க..
இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது மீரா மிதுன், அபிராமி மற்றும் சாக்க்ஷிகும் இடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டேதான் இருந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் மீராமிதுன் அபிராமியை நான் தான் ஒரு மாடல் அழகியாக அறிமுகம் செய்து வைத்தேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி மீதும், கமிட்டான படங்களிலிருந்து அடுத்தடுத்ததாக நீக்கப்பட்டு கொண்டே வந்திருந்தார். இதனால் கடுப்பான மீரா, தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் சமீபத்தில் பதிவிட்ட ஒரு பதிவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அபிராமி மற்றும் ஸாக்ஷி தான் தன்னுடைய பிரபலத்தை கிடைக்க வேண்டும் என்று வேண்டுமென்றே பல்வேறு சதிகளை செய்து வருவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், தனது தொலைபேசி எண்ணை பல்வேறு குழுக்களில் பகிர்ந்து விட்டதாகவும் இதனால் தனக்கு பல்வேறு தேவையில்லாத செல்போன் அழைப்புகள் வருவதாகவும். இதனால் தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும் மீராமிதுன் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதற்கு பதிலளித்த அபிராமி, மீராமிதுனின் செல் போன் நம்பர் தன்னிடம் இல்லவே இல்லை என்றும், தேவையான விஷயத்திற்கு தான் ரியாக்ஷன் கொடுக்க வேண்டும் என்றும், மீராமிதுன் போன்ற தேவையில்லாத ஆளுக்கு ரியாக்சன் கொடுக்கத் தேவையில்லை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் அபிராமி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். ஆனால், இந்த வீடியோவையும் தனக்காக தான் பதிவிடுகிறார் என்று நினைத்த மீரா மிதுன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார். அதில், தன்னை போல ரசிகர்களிடம் பேசுவதை நிறுத்த அபிராமி. நான் உனது புத்தியை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று தான் உன்னை உருவாக்கினேன். ஆனால், நீ என்னையையே காப்பி அடிக்க வேண்டாம். உன்னை போல நீ இரு நன்றிகெட்ட அபிராமி என்று பதிவிட்டுள்ளார். ஆனால், இந்த பதிவை கண்ட ரசிகர்கள் அபிராமி பதிவிட்ட வீடியோவிர்க்கும் தற்போது மீராமிதுன் பதிவிட்ட பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்று மிகுந்த குழப்பத்தில் இருந்து வருகிறார்கள்.