வனிதா இல்லாமல் புகைப்படத்தை பதிவிட்ட அருண் விஜய்.. மனம்நொந்து வனிதா சொன்ன விஷயத்தை பாருங்க..

0
12045
Arun-Vijay
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பல்வேறு சர்ச்சையான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். அதில் மிகவும் முக்கியமான ஒருவராக திகழ்ந்து வந்தவர்தான் நடிகை வனிதா கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி களில் எந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று உள்ளது அதற்கு முக்கிய காரணமே இந்த சீசனில் நடந்தேறிய பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் தான் அதற்கு முழு முதல் காரணமாக இருந்து வந்தார் நடிகை வனிதா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மூத்த மகள் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

-விளம்பரம்-
Image result for vanitha and family

விஜய்யின் சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானாளும் இவரால் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. இதுவரை தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். நடிகையாக நீடிக்காத வனிதா பின்னர் ஒரு சில பாடங்களில் தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார். ஆனால், இவர் தயாரித்து வந்த படம் மிகப்பெரிய தோல்வியை தழுவி இருந்தது. மேலும், பிக் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கு முன்பாகவே ரசிகர்கள் மத்தியில் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு நபராக தான் இருந்து வந்தார் வனிதா. இதற்கு முக்கிய காரணமே இவர்களது குடும்பத்தில் நடந்த பிரச்சினைதான். வனிதா கடந்த 2000 ஆம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு ராஜன் ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவரது இரண்டாம் திருமணத்தில்இவரது பெற்றோர்களுக்கும் இவரது இரண்டாம் திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை. அதனால் இவருக்கும் இவரது குடும்பத்தாருக்கும் அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருந்தது.

இதையும் பாருங்க : சொந்த நாட்டில் இருந்து மீண்டும் இந்தியா திருப்பிய முகென்.. வைரலாகும் புதிய வீடியோ..

- Advertisement -

இது ஒருபுறமிருக்க வனிதாவுக்கும் ஆகாஷுக்கு பிறந்த ஸ்ரீஹரி, யாரிடம் வளர்வது என்று நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வந்தது. ஆனால், வனிதாவின் பெற்றோர்கள் ஸ்ரீஹரி தங்களுடன் வளரவேண்டும் என்று நீதிமன்றத்தில் கூறிவந்தனர் இதனால் வணிதாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. இதனால் வனிதாவின் சகோதரர்களான அருண்விஜய், ப்ரீதா, ஸ்ரீதேவி, அனிதா, கவிதா என்று அனைவருமே வனிதாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். இதனால் இரண்டு திருமணம் ஆன பின்னரும் வனிதா தனியாகத்தான் வாழ்ந்து வந்தார்.

வனிதாவின் தாயார் மஞ்சுளா இறந்த பிறகு வனிதாவை குடும்பத்தினர் வனிதாவும் சுத்தமாக தங்களது குடும்பத்தில் சேர்ப்பது கிடையாது. பிக் நிகழ்ச்சிக்கு முன்பாக விஜயகுமார் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார் வனிதா. ஆனால், அந்த வீட்டை காலி செய்ய வேண்டும் என்று விஜயகுமார் கூறியதும், வனிதா பெரும் பிரச்சினையை செய்திருந்தார். அந்த செய்தி சமூகத்தில் பரவலாக பரவி வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் தனது சகோதரிகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார் வனிதாவின் சகோதரரும் நடிகருமான அருண் விஜய். ஆனால், அந்த புகைப்படத்தில் வனிதா இல்லாததால் வனிதாவின் ரசிகர்கள் பலரும் இந்த படத்தில் வனிதா ஏன் இல்லை என்றும், அவரை ஏன் இன்னும் குடும்பத்தை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கமன்ட்களை அள்ளி வீசி வந்தனர். இந்த நிலையில் வனிதா இல்லாமல் புகைப்படத்தை பதிவிட்ட அருண்விஜய்க்கு நடிகை வனிதா பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for vanitha husband

அந்த பேட்டியில், நமது நேரத்திற்கு ஏற்றார்போல தான் அனைத்தும் நடக்கும். அதில் ஒருசிலவை நாம் எதிர் பாராதது போல மிகவும் மோசமாக இருக்கும். ஒரு வேளை அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் இது போன்ற புகைப்படத்தை எடுத்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்க மாட்டேன். எனக்கு யார் என்றே தெரியாத பல ரசிகர்கள் என்னுடைய உணர்வை புரிந்து கொண்டு அதனை மதிக்கின்றார்கள். ஆனால், என்னுடைய உடன் பிறந்தவர்களுக்கு இது தெரியவில்லை என்பது தான் எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. அவர்களை பற்றி நான் மிகவும் அக்கறை கொண்டிருக்கிறேன். அதிலும் ப்ரீத்தா ‘அல்லி அர்ஜுனா ‘ படத்தில் நடிக்கும் போது. நான் தான் அவளுக்கு தினமும் மேக் அப் பொருட்கள் உணவு எல்லாவற்றையும் எடுத்து சொல்லுவேன். என்னுடன் பணிபுரிந்த அனைத்து நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் இது நன்றாகவே தெரியும் என்று மிகவும் உருக்கமாக பேசியுள்ளார் நடிகை வனிதா.

Advertisement