‘சோத்துக்கே வழி இல்ல இதுல நீங்க வேற ‘ அபிராமி பதிவிட்ட வீடீயோவால் கடுப்பான ரசிகர்கள்.

0
6903
abhirami
- Advertisement -

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-

கொரோனா பிரச்சனை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல சினிமாத்துறையில் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதனால் பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். அதேபோல மக்களுக்கும் பிரபலங்கள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் மான அபிராமி பதிவிட்ட வீடியோ ஒன்று ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதையும் பாருங்க : ரஜினி சார் ‘தளபதி’ படத்தப்ப, அவர் வச்சது தான் இந்த ‘இளைய தளபதி’ பட்டம் – விஜய்யின் Throwback வீடியோ இதோ.

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை அபிராமி இவர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இருந்தாலும் இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் அபிராமி சமீபத்தில் தலை முடி சம்பந்தப்பட்ட ஒரு பொருளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதை கண்ட ரசிகர் ஒருவர் ‘சோத்துக்கே வழி இல்ல இதுல நீங்க வேற தலைமுடியெல்லாம் பத்தி பேசுறீங்க’ என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த அபிராமி ‘நானும் உதவிகளைச் செய்கிறேன். அதற்கு விளம்பரம் தேவையில்லை உதவி செய்துவிட்டு அதை நான் விளம்பர படுத்த மாட்டேன். எனவே, நீங்கள் கவலைப்படாதீர்கள் நான் உதவியும் செய்து கொண்டுதான் இருக்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement