சிறப்பு விருந்தினராக சென்ற அபிராமி மீண்டும் ஒரு ரகசிய பரிசை கொடுத்தனுப்பிய முகென்.!

0
6426
mugen-abhirami
- Advertisement -

பிக் பாஸ் வீட்டில் பல்வேறு காதல் கதை ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் முதன் முதலாக காதல் கதையை ஆரம்பித்தது அபிராமி தன. பிக் பாஸ் வீட்டின் ஆரம்பத்தில் இருந்தே அபிராமி மீது கொஞ்சம் வெறுப்பான தோற்றமே இருந்து வந்தது. ஆரம்பத்தில் கவினை காதலித்து வந்த அபிராமி அதன் பின்னர், முகெனை காதலித்து வந்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் அவரிடமும் சண்டைபோட்டுக் கொண்டு பிரிந்துவிட்டார். அபிராமி இருந்த வரை முகென் அவரை காதலிக்கவில்லை என்று ஆணித்தனமாக கூறியிருந்தார். ஆனால், அபிராமி வெளியே சென்றதும் அவர் உடைத்து சென்ற மெடலை ஓட்ட வைத்துக்கொண்டு இருந்தார் முகேன். மேலும், முகென் மற்றும் அபிராமி இருவரும் காதலை மறைமுகமாக தான் வெளிப்படுத்தி வந்தனர்.

இதையும் பாருங்க : கவினுக்கு எதிராக கமன்ட் போடுங்க.! பணம் கொடுத்து சாக்க்ஷி செய்த சதி.! இணையத்தில் வைரலாகும் ஆதாரம்.!

- Advertisement -

ஆனால், வனிதா பிக் பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி ஆன பின்னர் அபிராமியிடம் முகென் குறித்து ஏதேதோ சொல்லி இருவருக்கும் சண்டையை ஏற்படுத்திவிட்டார். இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் முகெனுக்கு தனது ஆதரவை அளித்து வருகிறார் அபிராமி. அதே போல சமீபத்தில் முகெனின் அம்மா மற்றும் தங்கையை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார் அபிராமி.

இந்தநிலையில் முகேன் அணிந்திருந்த டி-ஷர்ட் ஒன்றை அபிராமிக்கு அன்பு பரிசாக வழங்கியுள்ளார்முகென். முகென் அணிந்திருந்த ஒரு டி-ஷர்ட்டை அபிராமி அணிந்துகொண்டிருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம்முகென் மற்றும் அபிராமி இடையே இன்னமும் ரொமான்ஸ் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. இதனால் வரை கவின் சட்டையை தான் லாஸ்லியா அணிந்து வந்திருந்தார் என்று பலரும் கலாய்த்து வந்த நிலையில் தற்போது அபிராமியும் அதே ரூட்டை பின்தொடர்வது ரசிகர்களுக்கு கொஞ்சம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

-விளம்பரம்-
Advertisement