பீஸ்ட் படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து வேற லெவலில் ஹிட் அடித்து வைரலாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாடலின் டீசர் ஒன்று நேற்று வெளியாகி இருந்தது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடிசூடா மன்னனாக ஆட்சி செய்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் நடிப்பில் இடம்பெறும். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் தீம் மியூசிக் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.
அரபிக் குத்து எழுதிய Sk :
இந்த நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி இருந்தது. நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக ‘பீஸ்ட்’ படத்தில் ‘அரபிக் குத்து ‘பாடலை எழுதி இருந்தார். நெல்சன் – சிவர்கார்த்திகேயன் கூட்டணியில் வெளியான டாக்டர் படத்தில் சிவர்கார்த்திகேயன் செல்லமா’ பாடலும் ‘ஓ பேபி’ பாடலும் சிவகார்த்திகேயன் தான் எழுதி இருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
யூடுபில் கலக்கும் அரபிக் குத்து :
தற்போது அதே பாணியில் பீஸ்ட் படத்தில் நெல்சன்- அனிருத்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி இருக்கும் அரபிக் குத்து பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து இருக்கிறது. யூடுயூபில் இந்த பாடல் இதுவரை 185 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்து சென்று கொண்டு இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாடல் ‘JollyOGymkhana’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.
‘JollyOgymkhana’ காப்பியா ?
இந்த பாடல் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. பொதுவாக அனிருத் பாடல்கள் வெளியானாலே அது வேறு பாடலின் காபி என்ற பஞ்சாயத்து துவங்கிவிடும். அந்த வகையில் இந்த பாடலும் விதிவிலக்கல்ல. ‘JollyOgymkhana’ பாடல் விக்ரம் நடித்த டேவிட் படத்தில் இடம்பெற்ற பாடலை போல இருக்கிறது என்று நெட்டிசன்கள் இப்போதே ஒப்பிட துவங்கிவிட்டனர். அதே போல அனிருத் இசையமைத்த Zomatto Ad போல இருந்ததும் என்றும் கூறி வருகின்றனர்.
‘JollyOGymkhana’ குறித்து அபிஷேக் ராஜா :
இப்படி ஒரு நிலையில் இந்த பாடல் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்ற ‘பீலா பீலா’ போல இருக்கிறது என்றுமறைமுகமாக அபிஷேக் ராஜா பதிவிட்ட ட்வீட் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே அரபிக் குத்து பாடலும் ரவுடி பேபி பாடலில் வரும் முதல் மெட்டை போல இருக்கிறது என்று விமர்சனம் எழுந்தது. அவ்வளவு ஏன் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘டான்’ படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோவில் கூட அனிருத் இதே மெட்டை தான் போட்டுள்ளார் என்றும் விமர்சனங்கள் எழுந்தது.