விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பரிச்சயமான முகங்களை விட மக்களுக்கு தெரியாத முகங்கள் தான் அதிகம் கலந்து இருந்தார்கள். அந்த வகையில் மக்களுக்கு பரிச்சயமானவர் யூடியூப் பிரபலம் அபிஷேக் ராஜா. இவர் யூடியூபில் விமர்சனம் செய்ததன் மூலம் பல பேரிடம் மொக்கை வாங்கி இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. பொதுவாகவே பிக்பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் உள்ளே சென்று அவர்கள் நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்து தான் வெறுப்பை சம்பாதிப்பார்கள்.
வீடியோவில் 6 : 30 நிமிடத்தில் பார்க்கவும்
ஆனால், அபிஷேக் பல பேரின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டு தான் நிகழ்ச்சியின் உள்ளே சென்று இருக்கிறார். அதிலும் இவர் பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்ட விதத்தை பார்த்து பலரும் இவரை கழுவி கழுவி ஊற்றினார்கள். இதனாலே இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மூன்றாவது வாரத்தில் வெளியேற்றப்பட்டார். பின் வைல்ட் கார்ட் என்றி மூலம் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அபிஷேக் நுழைந்து இருந்தார்.
இதையும் பாருங்க : முதன் முறையாக தன் மகனின் முகத்தை காட்டிய மஹத், என்ன பெயர் வைத்துள்ளார் பாருங்க (சிம்புவ நெனச்சி வச்சாரோ)
மீண்டும் மாறாமல் அதே திமிரு, அடாவடித்தனம், அடித்து பேசுவது என்று பிரியங்காவுடன் தேவையில்லாமல் வேலைகளை செய்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் நடந்த எலிமினேஷனில் அபிஷேக் குறைந்த வாக்குகள் எண்ணிக்கையின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டு இருந்தார். அதே போல அபிஷேக் ராஜா விவாகரத்து ஆனவர் தான்.
இவர் தீபா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் ஆன சில வருடங்களில் விவகாரத்து நடந்துவிட்டது. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபிஷேக் தன் விவகாரத்து குறித்தும் தன் முன்னாள் மனைவி குறித்து பேசி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைராலாக பரவி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, அபிஷேக்கின் முன்னாள் மனைவி தீபா, கடந்த ஜூலை மாதம் திருமணத்திற்கு பின் பெண்கள் சந்திக்கும் பிரச்சனை குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், அவர், தானும் Domestic voilance அனுபவித்து உள்ளதாக பேசி இருக்கிறார். மேலும், தான் அதுகுறித்து பேசிய போது யாரும் அதை நம்பவில்லை. இதுபோல உங்களுக்கு நடந்தால் அந்த உறவை விட்டு வெளியில் வந்துவிடுங்கள் என்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.