அபிஷேக்கை பிரிந்தது ஏன் – முன்னாள் மனைவி வெளியிட்ட விளக்கம். ரசிகர்களுக்கு முன் வைத்த வேண்டுகோள்.

0
17730
abhishek
- Advertisement -

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக விஜய் டிவியில் தொடங்கியது. இந்தமுறை பிக் பாஸ் வீடு பார்ப்போரை பிரமிக்க வைக்கும் அளவிற்கு பசுமை வண்ணம் கான்செப்டில் உள்ளது. இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 தாறுமாறாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி இரண்டு நாட்கள் வெற்றிகரமாக முடிவடைந்தது. வீட்டில் அனைவரும் தங்களுடைய அறிமுகத்தைக் கொடுத்து கலகலப்பாக இருந்து வருகிறார்கள். அந்த வகையில் பிக் பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான அபிஷேக் ராஜா பிக்பாஸ் வீட்டில் வழக்கம் போல் தன்னுடைய விமர்சனத்தை செய்து வருகிறார்.

-விளம்பரம்-

இரண்டாவது நாளே நிகழ்ச்சியில் அவர் முகத்தை பார்த்து ஜோசியம் சொல்கிறேன் என்று ஒவ்வொருவரின் முகத்தை பார்த்து அவர்களுடைய கேரக்டரை சொல்லியிருந்தது பார்ப்போருக்கு நகைச்சுவையாக இருந்தது.பின் திடீரென்று அவர் தன்னுடைய அம்மா சென்டிமென்ட் கதையை எடுத்துச் சொல்ல ஆரம்பித்தார். இதைக் கேட்டு பல பேர் சீரியஸ் ஆனார்கள், சில பேர் அழ ஆரம்பித்தனர். இந்தநிலையில் அபிஷேக் விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறி கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிக்பாஸ் அபிஷேக் ராஜாவுக்கு திருமணம் நடந்து ஒரு சில ஆண்டுகளிலேயே விவாகரத்து ஆகிவிட்டது.

இதையும் பாருங்க : ரகசிய திருமணத்தை முடித்த ஜெய் பீம் பட நடிகை – இவரை எதோ ஒரு சூப்பர் படத்துல பாத்த மாதிரி இருக்குல.

- Advertisement -

அவருடைய முன்னாள் மனைவி தீபா நடராஜன் அவர்கள் தற்போது இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, எல்லாருடைய வாழ்விலும் மீளமுடியாத துக்க சம்பவம் நடந்தால் அதிலிருந்து நம்மை நாமே வெளியே கொண்டுவருவது எவ்வளவு கஷ்டம் என அனைவருக்கும் தெரியும். அப்படி இருந்தும் ஒரு சில பேர் வேண்டுமென்றே நம்முடைய கடந்த காலத்தை தூண்டிவிடுவது போல் பேசுவார்கள்.

இதனால் நமக்கு மன கஷ்டம் ஏற்படும். மேலும், நான் என்னுடைய திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து வாங்க வேண்டும் என்பதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்துவிட்டேன். இந்த முடிவை நான் என்னுடைய சுய சிந்தனையோடு தான் எடுத்தேன். இதனால் என்ன பிரச்சனை வரும் என்பதை யோசித்தும், அதை எப்படி எதிர் கொள்ளலாம் என்று எல்லாத்தையும் சிந்தித்து தான் இந்த முடிவை நான் எடுத்தேன். இது என்னுடைய சொந்த முடிவு. அதுமட்டுமில்லாமல் திருமணமான புதிதில் ஒரு பேட்டி ஒன்று நான் கொடுத்திருந்தேன். அந்த பேட்டி எனக்கு விவாகரத்து ஆன பிறகு தான் அதிகமாக வைரலாகி வருகிறது. தயவுசெய்து இந்த வீடியோவை நீக்கி விடுங்கள் என்று கேட்டிருந்தேன்.

-விளம்பரம்-

ஆனால், அந்த வீடியோ போட்டவர்கள் யாரும் அதை கேட்கவே இல்லை. இது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது. மேலும், என்னுடைய முன்னாள் கணவர் ஒரு பெரிய நிகழ்ச்சிக்கு சென்றுள்ளதால் அவரைப் பற்றி கூகுளில் தேடும்போது இந்த வீடியோ தான் முதலில் தெரிகிறது என்றும் இது குறித்து பலரும் என்னிடம் கேட்கும்போது எனக்கு மன அழுத்தத்தையும் மன உளைச்சலையும் தருகிறது. எனவே அந்த வீடியோவை தயவுசெய்து நீக்கினால் நன்றாக இருக்கும் என்று கூறினார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement