ரகசிய திருமணத்தை முடித்த ஜெய் பீம் பட நடிகை – இவரை எதோ ஒரு சூப்பர் படத்துல பாத்த மாதிரி இருக்குல.

0
3131
lijomol jose
- Advertisement -

சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் நடித்து வரும் நடிகை லிஜோமோல் ஜோஸ் என்பவர் திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாளத்தில் வெளியான ‘மகேசிண்டே பிரதிகாரம்’ என்ற படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் அறிமுகமானார். பின் இவர் தமிழில் சசி இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் ஜிவி பிரகாஷின் சகோதரியாகவும், சித்தார்த்திற்கு மனைவி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் இவருடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.

-விளம்பரம்-

பின் தீதும் நன்றும் என்ற படத்திலும் இவர் நடித்திருந்தார். தற்போது இவர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ஜெய் பீம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் இவர் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பெண்ணாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வருகிற நவம்பர் மாதம் இரண்டாம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இது தவிர லிஜோமோல் ஜோஸ் அவர்கள் மலையாளத்தில் முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் பாருங்க : இன்று தன் திருமண நாளில் புகைபடத்தோடு சமந்தா பதிவிட்ட பதிவு (போன வருஷம் தன் கணவர் பற்றி என்ன போட்டு இருந்தார் பாருங்க)

- Advertisement -

இப்படி பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை லிஜோமோல் ஜோஸ் அவர்கள் தற்போது திடீரென்று திருமணம் செய்து கொண்டுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை லிஜோமோல் ஜோஸ் அவர்கள் கேரளாவை சேர்ந்த அருண் அண்டனி என்பவரை நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

Sivappu Manjal Pachai movie review: A Vikraman-esque film made by Sasi in  2019 | Entertainment News,The Indian Express

மேலும், இவர்களின் திருமண புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்களும், திரை உலக பிரபலங்களும் நடிகை லிஜோமோல் ஜோஸ்ஸுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவர் சூர்யாவின் ஜெய் பீம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement