தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக சொன்ன அபிஷேக் – அவரது மனைவி இந்த சூப்பர் சிங்கர் பிரபலத்தின் நெருங்கிய தோழியாம்.

0
5742
Abhishek
- Advertisement -

ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் கடந்த 3 ஆம் தேதி மாலை கோலாகலமாக துவங்கியது. கடந்த சீசனில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம் தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, சின்னத்தம்பி பவானி, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.

-விளம்பரம்-

அந்த வகையில் யூடுயூப் விமர்சகரான அபிஷேக் ராஜாவையும் நெட்டிசன்களுக்கு கண்டிப்பாக தெரிந்து இருக்கும். யூடுயூபில் தன்னை ஒரு அதி மேதாவி போல உணர்ந்து கொண்டு பிரபலங்களிடம் அடிக்கடி மொக்கை வாங்கி வரும் சினிமா பையன் என்று தனக்கே செல்லப் பெயர் வைத்துகொண்ட அபிஷேக்கை அறியாத வலைதள வாசிகள் ருக்க முடியாது.

- Advertisement -

அதுவும் இவர் பிரபலங்களை பேட்டி எடுக்கும் போது அவர்களிடம் இவர் கொடுக்கும் ரியாக்ஷன்களில் கண்டு கடுப்பாகத்தவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். பிக் பாஸில் கலந்துகொண்டு இருக்கும் போட்டியாளர்களில் ஹேட்டர்ஸ்களோடு இருக்கும் போட்டியாளர் என்றால் அது அபிஷேக் மட்டும் தான். இந்த நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டில் தனக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டதாக கூறியது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு தீபா நடராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். மேலும், தீபா, சூப்பர் சிங்கர் புகழ் சத்யபிரகாஷின் நெருங்கிய தோழி. அவரும் இவர்கள் திருமணத்திற்கு சென்று இருக்கிறார். ஆனால், இவர்கள் இவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement