அட, என்னங்க நேத்து ஷிவானி அம்மா பேசினத மிஸ் பண்ணிடீங்களா – இதோ பாருங்க அந்த வீடியோ.

0
2056
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இன்று ப்ரீஸ் டாஸ்க் துவங்கி இருக்கிறது. இதில் முதல் ஆளாக ஷிவானியின் அம்மா உள்ளே சென்று இருக்கிறார். உள்ளே சென்ற அவர் எதுக்கு இங்கே வந்த, இங்க நீ என்ன செய்தாலும் வெளியில் தெரியாது என்று நினைக்கிறாயா? ஏன் டி எப்ப பாத்தாலும் அவன் பின்னாடியே சுத்தர, உனக்குன்னு ஒரு தனித்தன்மை கிடையாதா. எப்ப பாத்தாலும் அவன் என்ன சொல்றானோ அத தான் செய்வியா?

- Advertisement -

இதுக்கு தான் உள்ள வந்திய ? இந்த 85 நாள்ல நீ என்ன பண்ணணுன்னு சொல்லு. இது பிக் பாஸ் நிகழ்ச்சி ஜோடியா ஆட இது ஒன்னும் ஜோடி நிகழ்ச்சி கிடையாது. உன்னால ஊர்ல சொந்தக்காரங்ககிட்ட எல்லாம் அசிங்கப்படுறோம். ஆரி, உனக்கு என்ன பேக்கேஜ் வச்சாரு, அவரு எத்தன தடவ சொன்னாரு தனியா விளையாடுன்னு. ஆனா, அவன் யார நாமினேட் பன்றானோ அவன தான் நீ நாமினேட் பண்ணற.

உனக்குன்னு ஒரு புத்தி இல்ல என்று கண்ட மேனிக்கு ஷிவானியை திட்டத் தீர்த்த ஷிவானியின் தாயார், ஆரியிடம் நீங்க சூப்பரா விளையாடுறீங்க என்று கூறினார். மேலும், இறுதி வரை பாலாஜியிடம் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஷிவானியின் அம்மா என்ட்ரிக்கு பின்னர் ஷிவானியின் பெயர் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. மேலும், பலர் ஷிவானியின் அம்மாவிற்கு ஆதரவாக இருந்தாலும் ஒரு சிலரோ உங்க பொண்ணு 4 மணிக்கு தினமும் கவர்ச்சியான புகைப்படம் போடும் போது உங்களுக்கு மானம் போலையா என்று விமர்சித்தும் வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement