எனக்கு 50 லட்சம் பரிசு பணம் வேண்டாம்..! இதுக்காகவாவது நான் ஜெயித்தே ஆகணும்..! ஐஸ்வர்யா சபதம்.!

0
323
Aishwarya-Bigg-BOss

பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில் வெற்றியாளர் யார் என்பது இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும். இறுதி போட்டியில் ரித்விகா, ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலக்ஷ்மி ஆகியோர் தகுதி பெற்ற நிலையில் இந்த வாரம் முழுக்க பெரிதாக டாஸ்க் எதுவும் இல்லாமல் கொஞ்சம் சப்பென்று சென்றுகொண்டிருக்கிறது.

Bigg-boss-aishwarya

இருப்பினும் அவ்வப்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சில போட்டியாளர்கள் வந்த சென்ற வண்ணமும் இருக்கின்றனர். நேற்றைய நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் நெருங்கிய தோழியான யாஷிகாவும், பாலாஜியும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீண்ட வாரங்களாக ஐஸ்வர்யா காப்பாற்றபட்டு வருவது எப்படி என்று தான் ரசிகர்களுக்கு ஒரு புரியாத புதிராக இருந்து வருகிறது. ஐஸ்வர்யாவிற்கு எந்த அளவிற்கு மக்களிடம் வெறுப்பு உள்ளது என்பதை நாம் தினமும் சமூக வலைதளத்தில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். இறுதி போட்டிக்கே செல்ல மாட்டார் என்று நினைத்திருந்த ஐஸ்வர்யா பிக் பாஸ் பட்டத்தை வென்றாலும் அதில் ஆச்சர்யமொன்றும் இல்லை.

Aishwarya

இறுதி வாரம் என்பதால் போட்டியாளர்களுக்கு பெரிதாக டாஸ்க் எதுவும் கொடுக்கப்படவில்லை, அதற்கு மாறாக போட்டியாளர்கள் மனதில் உள்ளதையும், பிக்பாஸ் பட்டத்தை தான் கைப்பற்ற விரும்புவது ஏன் என்பது குறித்தும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்தார் பிக் பாஸ். அப்போது ஐஸ்வர்யா பேசுகையில் நான் இந்த நிகழ்ச்சியில் இருந்து 2 வாரங்களிலேயே வெளியேறிவிடுவேன் என்று நினைத்திருந்தேன். ஆனால் தொடர்ந்து இத்தனை வாரங்கள் மக்கள் என்னை காப்பாற்றி வருகிறார்கள். இதை நான் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை.

Aishwarya

தமிழக மக்கள் என் மீது வைத்துள்ள பாசத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.எனக்கு இரண்டு ஆசை தான் ஒன்று என்னை தமிழ் மக்கள் அவர்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். மற்றொன்று நான் வெற்றி பெற வேண்டும் என்பது தான் . எனக்கு பட்டத்தை வென்று 50 லட்ச ரூபாயை வெல்ல வேண்டும் என்பது ஆசை இல்லை. நான் இறுதி மேடையில் நிற்கவேண்டும் அது தான் என்னுடைய ஆசை. அதற்கு தமிழ் மக்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.