ஷூட்டிங்கிற்கு வர முரண்டு பிடித்த நடிகை.! காலில் விழுந்து கெஞ்சி நடிக்கவைத்த இயக்குநர்..! இந்த நடிகையா.?

0
499
Murugan
- Advertisement -

ஒரு திரைப்படங்களை எடுத்து முடிப்பதற்கு முன்பாக இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து விடுகின்றனர். அந்த வகையில் தனது முதல் படத்திலேயே கதாநாயகி செய்த பிரச்சனையால் அவரது காலில் விழுந்து படப்பிடிப்பை தொடர்ந்துள்ளார் ஒரு இயக்குனர்.

-விளம்பரம்-

Murugan

- Advertisement -

புதுமுக இயக்குனரான எம்.கே.முருகன் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் உதவி இயக்குனர், உதவி ஒளிப்பதிவாளர், புரோடக்ஷன் மேனேஜராகுவும் இருந்து வந்துள்ளார். தற்போது முதன் முறையாக “யாத்ரா” என்ற படத்தை இயக்கி அதனை தயாரித்தும் வருகிறார். இயக்குனர் எம்.கே.முருகனின் ஸ்ரீசாய் லக்ஷ்மி பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் புதுமுக நடிகர்கள் அர்ஜுன், யோகேஷ், மாயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வித்யாசமான திகில் படமாக உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

சமீத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இந்த படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான எம்.கே.முருகன் பேசியுள்ளது என்னவெனில், நான் சினிமா துறையில் பெற்ற அனுபவத்தை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளேன். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளேன். ஒரு முறை இந்த படத்தின் படப்பிடிப்பு நாமக்கல்லில் நடைபெற்று வந்தது. அப்போது நடிகை மாயா பிரச்சனை செய்து விட்டார்.

-விளம்பரம்-

yaatra

yaatra2

திடீரென்று படப்பிடிப்பில் இருந்து கிளம்பி பெட்டியை எடுத்துக்கொண்டு நான் வீட்டுக்கு போகிறேன் என்று கிளம்பி விட்டார். நான் எவ்வளவோ சமாதானம் செய்தும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள மாட்டேன் என்று அடாவடி செய்தார். இறுதியில் நான் அவருடைய காலில் விழுந்து கெஞ்சி பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வைத்தேன் என்று கூறியுள்ளார்.

Advertisement