ஐஸ்வர்யா தப்பிக்க..அவர் செய்த கேவலமான சூழ்ச்சி..! அப்பாவியாய் ஏமாந்த சென்றாயன்.!

0
942
Sendrayan
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று (செப்டம்பர் 4) போட்டியாளர்களுக்கு ஒரு வித்யாசமான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு வரும் அதை எடுக்கும் நபர்கள் அடுத்த வாரம் நேரடியாக நாமினேட் செய்யபடுவார்கள். அவர்கள் நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் அந்த அழைப்பில் யாரை குறிபிடிக்கின்றனரோ அவர்களை கன்வின்ஸ் செய்து டாஸ்க்கை செய்ய வைக்க வேண்டும்.

-விளம்பரம்-

Aishwarya

- Advertisement -

இன்று வந்த முதல் தொலைபேசி அழைப்பை ஐஸ்வர்யா எடுக்கிறார். அதில் அவர் அடுத்த வார நாமினேஷனில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் சென்ராயானின் தலை முடியை சிகப்பு நிறத்தில் டை அடித்துகொள்ள கன்வின்ஸ் செய்ய வேண்டும். அப்படி கன்வின்ஸ் செய்து விட்டால் ஐஸ்வர்யா அடுத்த வாரம் சேப் என்று அந்த அழைப்பில் அறிவிக்கபடுகிறது.

பின்னர் உள்ளே சென்ற ஐஸ்வர்யா, சென்ராயனிடம் சென்று நீங்கள் அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து நீங்கள் (சென்ராயன்) தப்பிக்க வேண்டும் என்றால் உங்கள் முடியை நீங்கள் சிகப்பு நிறத்தில் டை அடித்துகொள்ளவும் என்று அப்படியே மாற்றி கூறிவிடுகிறார். இதனை கண்ட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்து விட்டனர்.

-விளம்பரம்-

senrayan

உண்மையில் ஐஸ்வர்யா அடுத்த வாரம் நாமினேஷனில் இருந்து காப்பாற்றபட வேண்டும் என்றால் அவர் சென்ராயனை டாஸ்க் செய்ய கன்வின்ஸ் செய்யவேண்டும் என்று தான் கூறப்பட்டது. ஆனால், ஐஸ்வர்யா சென்ராயனிடம் சென்று உங்கள் முடியை கலர் செய்தால் நீங்கள் நாமினேஷனில் இருந்து காப்பாற்றபடுவீராகள் என்று ஐஸ்வர்யா கூறிவிடுகிறார். அதனால் சென்ராயனும் எந்த கேள்வியும் கேட்காமல் தனது முடியை கலர் செய்ய ஒப்புக்கொள்கிறார்.

பின்னர் ஐஸ்வர்யாவிற்கு மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் சென்ராயன் டாஸ்க் செய்தால் நீங்கள் தான் நாமினேஷனில் இருந்து காப்பாற்றபடுவீராகள், அவரல்ல நீங்கள் பொய் சொல்ல கூடாது என்று கூறியதும், அதற்கு ஐஸ்வர்யா இல்ல இது என்னோட திட்டம் நான் அவரிடம் பின்னர் கூறிவிடுகிறேன் என்று கூறுகிறார்.

bigg boss sendrayan

சென்ராயனின் வெகுளி தனத்தை பயன்படுத்தி ஐஸ்வர்யா இப்படி பொய் கூறியது ரசிகர்களால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் சென்ராயன் பல முறை தனது முடி தான் எனக்கு முக்கியம் என்று கூறியிருக்கிறார். ஒரு வேலை ஐஸ்வர்யா, சென்ராயனிடம் உண்மையை கூறியிருந்தால் சென்ராயன் கண்டிப்பாக ஐஸ்வர்யாவிற்காக தனது தலை முடியை கலர் செய்திருக்க மாட்டார் என்பது தான் பலரின் எண்ணமும்.

Advertisement