கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளர்களாக களமிறங்கிய ஐஸ்வர்யா தத்தா தற்போது மஹத் நடித்து வரும் கெட்டவனு பேரெடுத்த நல்லவன்டா ‘ என்ற புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்கள்.
எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் M in ❤ அதாவது தான் காதலில் இருப்பதாக மிக சூசகமாக தெரிவித்துள்ளார். இதனை கண்டா ரசிகர்கள் அனைவரும் அந்த நபர் யார் என்று கேட்டு வருகின்றனர்.
ஐஸ்வர்யா தத்தா கோபி என்பவரை காதலித்து வருவதாக ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது. ஏனெனில் அவர் தனது கைவிரலில் கோபி என்ற பெயரைத்தான் பச்சை குத்திக் கொண்டுள்ளார். ஐஸ்வர்யா காதலித்து வருவதாக கூறப்படும் கோபி பண மோசடி வழக்கில் சில நாட்களுக்கு முன்னர் கைதானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரை ஷாரிக்கை காதலர் என்ற கண்ணோட்டத்தில் தான் ஐஸ்வர்யா பார்த்து வந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே இவர்கள் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு காதல் மலராமலே போனது. இந்த நிலையில் ஐஸ்வர்யா இப்படி ஒரு வீட்டை பதிவிட்டுள்ளது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.