சொல்லி வைத்தார் போல மூன்று மொழி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரே நேரத்தில் நடைபெறும் விஷயம்.!

0
4312
Bigg-Boss-3

கடந்த சில தினங்களாக காதலும் கடலையுமாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வனிதாவின் என்ட்ரிக்கு பின்னர் தலைகீழாக மாறிவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது சிறப்பு விருந்தினராகச் சென்று உள்ள வனிதா தான் மற்ற போட்டியாளர்கள் மத்தியில் நாசுக்காக சண்டையை கிளப்பி விட்டுள்ளார். இதனால் பிக் பாஸ் வீட்டில் பல சண்டைகள் நடந்து வருகிறது.

வனிதா :

வனிதா சென்ற பின்னர் பிக் பாஸ் வீட்டில் ஸ்வாரோசியமே இருக்கவில்லை என்று ரசிகர்கள் புலம்பி வந்தனர். அதன் பின்னர் சாக்க்ஷி அபி லாஸ்லியா என்று பலரை வைத்து காய் நகர்த்தினாலும் வனிதா ஒரு நபர் கொடுத்த கண்டன்ட்க்கு ஒரு பத்து சதவீதம் கூட மற்றவர்களால் கொடுக்க முடியவில்லை. எனவே, வனிதாவிற்கு நிகராக ஒரு போட்டியாளரை களமிறக்கலாம் என்று காஸ்தூரியை கொண்டு வந்தனர்.

இதையும் பாருங்க : சுதந்திர வாழ்த்தை கூறி பெருமை தேடிக்கொள்ள நினைத்த மீரா.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.! 

- Advertisement -

ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால் தான் வனிதாவை சிறப்பு விருந்தினர் என்ற பெயரில் அழைத்து வந்து போட்டியாளர்கள் மத்தியில் சண்டையை கிளப்பியிட்டுள்ளனர். இது தமிழில் மட்டும் இல்லை தெலுங்கில் கடந்த சீசனில் மக்கள் வெளியேற்றிய ஒரு போட்டியாளரை Wild Card சுற்று மூலம் மீண்டும் அழைத்து வந்துள்ளனர்.

தம்மன்னா சிம்ஹாத்ரி :

-விளம்பரம்-

அதே போல  மராத்தி பிக்பாஸ் சீசன் 2 ல் கடந்த சீசன் வெற்றியாளர் Megha Dhade, Sushant Shelar, Resham Tipnis ஆகியோர் தற்போது உள்ளே அழைத்துவந்துள்ளனர். இப்படி சொல்லி வைத்தது போல ஒரே நேரத்தில் மூன்று மொழி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் சர்ச்சையான போட்டியாளர்களை தந்திரமாக உள்ளே அனுப்பி வைத்துள்ளது பிக் பாஸ்.

இதற்கு ஒரு காரணம் மட்டும் தான், பிக் பாஸ்ஸை அணைத்து மொழிகளிலும் எண்டிமால் என்ற நிறுவனம் தான் நடந்துகிறது. அதனால் அணைத்து மொழி பிக் பாஸிற்கும் ஒரே ஸ்க்ரிப்ட் தான். அதில் தென்னிந்தியா விற்கு வேறு ஸ்க்ரிப்ட் வட இந்தியாவிற்கு வேறு ஸ்க்ரிப்ட், இது ஒன்று தான் வித்யாசம்.

Advertisement