நாங்க சேர்ந்ததுக்கு காரணமே பிரியங்கா தான் – திருமணம் குறித்து அமீர் சொன்ன விஷயம்.

0
443
- Advertisement -

நாங்கள் ஒன்றாக இருப்பதற்கு காரணம் பிரியங்கா தான் என்று நடன இயக்குனர் அமீர் கூறியிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் அமீர். இவர் நடன இயக்குனர் ஆவார். இவரின் தந்தை-தாய் சிறு வயதில் இருக்கும் போதே இறந்துவிட்டார்கள். பின் ஆலனா, ஆயிஷா ஆகிய பெண்கள் தான் அமீர் வாழ்க்கையை மாற்றினார்கள். பின் இவர் பல நிகழ்ச்சிகளுக்கு நடனம் சொல்லி இருந்தார். இருந்தாலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியில் இவர் நடிகை பாவனியை காதலித்தார். ஆனால், பாவனி இவர் காதலுக்கு நோ சொல்லிக் கொண்டு வந்தார். விடாது தன்னுடைய காதலை அமீர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சியில் நடனம் ஆடிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இவர்களுடைய நெருக்கத்தை பார்த்து பலருமே இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் கூறியிருந்தார்கள்.

- Advertisement -

அமீர் -பாவனி காதல்:

அதுமட்டுமில்லாமல் அமீரும் ஒவ்வொரு எபிசோடும் பாவனிக்கு தன் காதலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். பின் ஒருவழியாக பாவனி தன்னுடைய காதலை கூறிவிட்டார். தற்போது இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இருவரும் சேர்ந்து விளம்பரம், ஆல்பம், படங்கள் என்று பிசியாக இருக்கிறார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த துணிவு படத்திலும் அமீர் -பாவனி சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். தற்போது இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்கள்.

அமீர் -பாவனி கேரியர்:

அமீர் ஒரு படத்தை இயக்கிக் கொண்டும் வருகிறார். பல படங்களில் நடன இயக்குனராகவும் கமிட் ஆகியிருக்கிறார். மேலும், இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் தான் வாழ்ந்து இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் தங்கள் கேரியரில் ஏதாவது சாதனை செய்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் தொகுப்பாளினி பிரியங்கா தன்னுடைய கலைப்பயணத்தில் 15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் என்று நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

-விளம்பரம்-

விழாவில் அமீர் சொன்னது:

இந்த விழாவில் அமீர் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர், நான் பிரியங்காவை ஒரு ரசிகனாக ரசித்துக்கொண்டிருக்கிறேன். எங்களுக்குள் அறிமுகம் இருந்தாலும் பெரிதாக பேசிக் கொண்டதில்லை. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்களுடைய உறவு என்பது வேறு இடத்திற்கு கொண்டு சென்றது என்று பேசி கொண்டு இருந்தார். அப்போது ப்ரியங்கா, பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர்- பாவனிக்கு இருமுறை திருமணம் நடந்த போது என்னிடம், அக்கா நீ தான் அந்த தாலி எடுத்து கொடுக்க வேண்டும் என்று ரிகர்சல் போது அமீர் சொன்னார்.

பிரியங்கா குறித்து சொன்னது:

அப்போது தெரியவில்லை. ஸ்டேஜ் பர்பாமன்ஸ் பண்ணும்போதும் ஒரு மாறி பீல் ஆகிவிட்டது. கடந்த வாரம் படம் பார்க்க சென்றபோது கூட இந்த நிகழ்வை சுட்டிக்காட்டி, எப்படா கல்யாணம் என்று கேட்டேன்? என்று கூறிக் கொண்டிருந்தார். உடனே அமீர், ரீலில் வந்த மாதிரி ரியலிலும் பிரியங்கா தான் தாலிக்கு எடுத்துக் கொடுப்பார். அவர் தான் என் கூட இருக்கணும். நான் பவானிக்கு ப்ரொபோஸ் பண்ணேன். ஆனால், அவள் என்னுடன் இருக்க காரணம் பிரியங்கா தான். பிரியங்கா இல்லை என்றால் பவானி என்னுடன் இருந்திருக்க மாட்டார். எங்கள் கல்யாணம் இந்த வருடத்தில் நடந்து விடும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement