பாவனி கழுத்தில் தாலி கட்டிய அமீர் – இணயத்தில் வைரலாகும் வீடியோ. என்னய்யா நடக்குது ?

0
797
amir
- Advertisement -

பாவனி கழுத்தில் அமீர் தாலி கட்டி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பவர் பாவனி ரெட்டி. இவர் சின்னத்திரையில் ஆரம்பத்தில் ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற பல சீரியல்களில் நடித்து இருந்தார். பின் இவர் சின்ன இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சின்ன தம்பி என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர் சில படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். இதனிடையே பாவனி கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதீப் என்ற நடிகரை திருமணம் செய்து இருந்தார். ஆனால், ப்ரதீப் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் சிறிது காலம் பாவனி மீடியாவில் இருந்து விலகி இருந்தார். பின் சின்னத்திரை பிரபலத்தின் மூலம் தான் பாவனிக்கு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருந்தது.

- Advertisement -

இதையும் பாருங்க : 40 நாட்களுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த மீனா – கவலை தோய்ந்த புன்சிரிப்பு, ரசிகர்கள் ஆறுதல்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி-அமீர்:

பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே பாவனி பல பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். இருந்தும் அவரை நாமினேஷனில் காப்பாற்றி இறுதி சுற்றுக்கு அனுப்பி வைத்து இருந்தார்கள் ரசிகர்கள். அதோடு இந்த நிகழ்ச்சியில் வைல் கார்ட் என்ட்ரியாக வந்த அமீர் பாவனியை காதலிப்பதாக வெளிப்படையாக கூறி இருந்தார். ஆனால், பாவனி முடியாது என்று சொல்லி விட்டார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக ரசிக்கப்பட்ட ஜோடிகள் என்றால் பாவனி-அமீர்.

-விளம்பரம்-

பாவனி-அமீர் காதல்:

நிகழ்ச்சிக்கு பின் வெளியே வந்தவுடனே அமீர்- பாவனி இருவருமே வெளியே சுற்றி இருந்தார்கள். அதேபோல் பிக் பாஸ் வீட்டில் வெடித்த அனைத்து சர்ச்சைகளுக்கும் இவர்கள் இருவரும் தைரியமாக பதில் கூறி இருந்தார்கள். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர்-பாவனி இருவரும் பங்கேற்று நடனம் ஆடி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் நெருக்கத்தைப் பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கி விட்டார்கள் என்றெல்லாம் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சி :

மேலும், அமீரும் ஒவ்வொரு எபிசோடும் பாவனிக்கு தன்னுடைய காதலை வெளிப்படுத்திக் கொண்டே வருகிறார். ஆனால், பாவனி எனக்கு கொஞ்சம் டைம் வேண்டும். கூடிய சீக்கிரத்தில் நல்ல பதிலைச் சொல்கிறேன் என்று கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் இருவரும் சேர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் பிபி ஜோடிகள் 2 நிகழ்ச்சி குறித்த புரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

பாவனிக்கு தாலி கட்டிய அமீர்:

அதில், இந்த வாரம் நிகழ்ச்சியில் ஆகா கல்யாணம் சுற்று நடக்க இருக்கிறது. நிகழ்ச்சியில் பாவனிக்கு அமீர் தாலி கட்டியிருக்கிறார். இது நிகழ்ச்சிக்காக செய்ததாக இருந்தாலும் அங்கிருந்த பலரும் அமீர் தாலி கட்டுவதை பார்த்து ஆனந்தக் கண்ணீர் விட்டதுடன் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். அந்த வீடியோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் நிஜமாகவே எப்ப கல்யாணம் பண்ணுவீர்கள்? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Advertisement