இந்த மாதிரி விஷயத்தை தான் அந்த ஆள் என்ஜாய் பண்ணுவான் – விக்ரமனை மோசமாக கேலி செய்த அமுதவானன், ராபர்ட்.

0
516
vikraman
- Advertisement -

பிக் பாஸ் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் சீசன்6 கடந்த மாதம் ஆரம்பித்து தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. தொலைக்காட்சியிலும் ஓடிடியிலும் ஒன்றாக ஒளிபரப்பாகிவரும் இந்த நிகச்சியின் தொடக்கத்தில் குடும்பமாக இருந்த பிக் பாஸ் வீடு தற்போது ஒருவரை ஒருவர் அடித்துக்கொல்லும் அளவிற்கு இருந்து வருகிறது. ஜி.பி.முத்து, அசல் கோளாறு, மெட்டிஒலி சாந்தி மற்றும் செரீனா என நன்கு போட்டியாளர்கள் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிறியுள்ளனர். மீதமுள்ள 18 போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் ரசிகர்களை மகிழ்விக்க பல்வேறு மாறுதல்களை பிக் பாஸ் நிகழ்ச்சியானது செய்து வருகிறது.

-விளம்பரம்-

தற்போது நடந்து வரும் டாஸ்க் மற்ற டாஸ்க்குகளை போல இல்லாமல் போட்டியாளர்கள் இரண்டு டீம் களாக “கண்ணா லட்டு தின்ன ஆசையா” மற்றும் “ஆட தேனடை” என்ற மற்றொரு டீமாகவும் பிரிந்துள்ளனர். ஆனால் இதில் தான் பெரிய திருப்பமே இருக்கிறது. அந்த திருப்பம் என்னவென்றால் கன்வேயர் பெல்ட் மூலம் உள்ளே இருந்து வரும் பொருட்களை எடுப்பதற்கு போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு கன்வேயர் பெல்ட் பக்கத்தில் இருக்கின்றனர். இப்படி நிக்கும் போது போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு உள்ளே இருந்து வருவதை எடுப்பதற்கு முயற்சி செய்கின்றனர்.

- Advertisement -

இதனால் போட்டியாளர்களுக்கிடையே தல்லுமுல்லு ஏற்பட்டு பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இப்படி கலவரமாக இருக்கும் போது சில குயூட் காட்சிகளையும் நம்மால் பார்க்கத்தான் முடிகிறது.நேற்று மைனாவும் விகாரமனும் நடிகர் தனுஷ் நடித்திருந்த “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தின் ‘மேகம் கருக்காத பெண்ணே பெண்ணே’ என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தனர்.

இந்நிலையில்தான் போட்டியாளரான விக்ரமனுக்கு வித்தியாசமான தண்டனை பிக் பாஸால் கொடுக்கப்பட்டது. அது என்னவென்றால் விக்ரமன் மற்றும் மகேஸ்வரி இருவரும் போட்டியாளர்கள் பாடும் ரொமான்டிக் பாடலுக்கு தகுந்தவாறு நடனம் ஆடவேண்டும் என்பதுதான் அந்த டாஸ்க். அப்படி இவர்கள் நடனமாடும் போது மற்ற போட்டியாளரக்ள் இவர்கள் இருவரையும் உற்சாகப்படுத்தி பாடல்களை பாடியது ரசிகர்களை கவரும் வண்ணம் இருந்தது.இப்படியிருக்கும் போது கடந்த சில நாட்களாகவே அமுதவாணன் விக்ரமனை குறிவைத்து பேசிவருகிறார்.

-விளம்பரம்-

இதனை ஏற்கனவே விக்ரமன் தன்னை அமுதவாணன் பர்சனலாக தன்னை தாக்குவதாக கூறியிருந்தார். ஆனால் மறுபக்கம் விக்ரமன் பொய் பேசுவதாக அமுதவாணன் கூறியிருந்தார். இப்படி இருவருக்கும் இடையே பிக் பாஸ் தொடங்கியதிலிருந்தே பல கருத்து வேறுபாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில்தான் ரக்சிதா , அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், மகேஸ்வரி உள்ளிட்டோர் விக்ரமனின் நடனத்தை பற்றி வீட்டின் வராண்டாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அதில் மகேஸ்வரி மற்றும் ரக்சிதா நடனம் ஆடும்போது ஏற்பட்ட வேடிக்கையான நிகழ்வுகளை கூறிக்கொண்டிருக்க அமுதவாணம் விக்ரமன் மீது வன்மம் இருப்பது போல விக்ரமமை பற்றி பேசினார். அதிலும் டான்ஸ் ஆடும் போது இருந்த குஷி விகர்மனுக்கு 200பாய்ண்ட்ஸ் கொடுத்தாலும் ஈடாகாது என்று விக்ரமனை கலாய்த்திருந்தார். மேலும் ராபர்ட் மாஸ்டர் இந்த நிகழ்வை நடிகர் சிம்பு நடித்திருந்த சிலம்பாட்டம் என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியுடன் ஒப்பிட்டு கலாய்த்திருந்தார். இப்படி விக்ரமனை பற்றி அமுதவாணனும் ராபர்ட் மாஸ்டரும் கூறியிருக்கும் விடியோவானது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement