பிக்பாஸ் அமுதவாணனுக்கும் பிஆர்டி இருக்கு என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 61 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஜிபி முத்து, அசீம் , அசல், ராபர்ட், ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, சிவின் கணேசன் என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
பின் முதல் வாரத்திலேயே வைல்ட் கார்ட் எண்ட்ரியாக மைனா நந்தினி வந்து இருந்தார். மேலும், இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 8 போட்டியாளர்கள் போக தற்போது 13 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் பல மாற்றங்களை செய்து இருக்கிறது.
பிக் பாஸ் போட்டியாளர்களின் PR :
இது ஒரு பக்கம் இருக்க, பொதுவாகவே நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தங்களுக்கு என்று ஒரு சமூக வலைத்தளங்களை உருவாக்கி அதை மெயின்டைன் பண்ண சொல்லி பணம் கொடுத்து விட்டு வருவார்கள். அதற்கு பிஆர்டி என்று பெயர். இது எல்லா சீசன்களிலுமே நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இந்த முறை தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிஆர்டி குறித்து பேசப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ராம் 7 லட்ச ரூபாய் பி ஆர் டி காக கொடுத்து இருப்பதாக கூறியிருந்தார்.
அமுதவாணன் PR வேலையா ? :
இவரை அடுத்து மணிகண்டன் நாமினேஷன் பட்டியலில் வந்த உடனே ரொம்ப வருத்தப்பட்டு பேசியிருக்கும் போது குயின்சி, என்னுடைய டீம் உங்களுக்கு சப்போர்ட் பண்ணும் என்று கூறியிருந்தார். இப்படி இவர்கள் கூறியதன் மூலம் இவர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து இவர்களுக்கு ஆதரவு கொடுக்க ஒரு குழுவை உருவாக்கி ஃபேன் பேஜ் ஓப்பன் செய்திருக்கிறது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இந்த நிலையில் அமுதவாணனுக்கும் பி ஆர் டீம் உருவாக்கி இருக்கும் ஆதரவு தற்போது வைரலாகி வருகிறது.
திடீரென்று அமுதவானனுக்கு வந்த ஆதரவு :
அதாவது, அமுதவாணன் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்தே சரியாகவே விளையாடுவதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இவர் ஒரு பக்கமாகவும், குறிப்பாக ஜனணியுடன் மட்டுமே அதிகமாக பேசிக் கொண்டும் பழகியும் வருகிறார். இதற்கு பலருமே விமர்சித்து இருந்தார்கள். ஆரம்பத்தில் இருந்தே அமுதவாணன், ஜனனி குரூப் செய்து கொண்டு பெரிதாக விளையாட்டில் நாட்டம் காட்டாமல் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அமுதவாணன் தான் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்ற ஒரு ட்விட் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.
ட்வீட் போடும் தெலுங்கு மற்றும் இந்தி வாசிகள் :
இப்படி வெளியாகியிருக்கும் ட்விட் எல்லாமே தெலுங்கு காரர்கள் செய்ததாக கூறப்படுகிறது. காரணம், அந்த ட்விட்டரில் இருக்கும் டிபி எல்லாம் ஜூனியர் என்டிஆர், மகேஷ்பாபு போன்ற தெலுங்கு பிரபலங்களின் புகைப்படங்களாக இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஹிந்தி பெயரில் கூட சில ட்விட்கள் வந்து இருக்கிறது. இப்படி திடீரென்று அமுதவாணனுக்கு ஆதரவாக வெளியான பதிவுகள் மூலம் இவருக்கும் பி ஆர் டி இருக்கு என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.