ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இன்றுடன் நிரைடைகிறது. 16 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 12 பேர் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். இதில் வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு தாமாகவே வெளியேறி இருந்தார். அதே போல நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் வைல்ட் கார்ட் போட்டியாளராக உள்ளே நுழைந்த சுரேஷ் சக்ரவர்த்தியும் உடல் நல பிரச்சனை காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இறுதி வாரத்தில் அபிராமி, ஜூலி, ரம்யா பாண்டியன், பாலாஜி, நிரூப், தாமரை ஆகிய 6 பேர் தகுதி பெற்று இருந்த நிலையில் இந்த வாரம் அபிராமி மற்றும் ஜூலை திடீரென்று வெளியேற்றப்பட்டனர். இதில் ஜூலியின் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்து இருந்தது. இந்த சீசனில் மிகவும் ரசிகர்களை எரிச்சல் அடைய செய்தது என்றால் அது அனிதா தான் என்பதில் சந்தேகம் இல்லை.
இதையும் பாருங்க : கிரிக்கெட் விளையாடும் போது ஏற்பட்ட பழக்கம், IT வேலையை விட்டுவிட்டு சினிமாவிற்கு வந்த டாணாகாரன் முருகனின் கதை.
பெயரை டேமேஜ் செய்துகொண்ட அனிதா :
கடந்த சீசனை விட இந்த சீசனில் தான் அனிதாவின் பெயர் பெரிதும் டேமேஜ் ஆனது. அதே போல வெளியேறுவதர்க்கு முன் அனிதா பிக் பாஸ் வீட்டின் கதவு அருகில் நின்றுகொண்டு நீண்ட நேரம் புலம்பிக்கொண்டிருந்தார். இந்த எலிமினேஷன் எப்படி என எனக்கு புரியல. நான் நன்றாக தான் விளையாடினேன், நான் வெளியேறத என்னாலே நம்ப முடியல என்ன காரணமாக இருக்கும் என்று புலம்பி கொண்டு இருந்தார்.
அனிதா கணவர் போட்ட பதிவு :
அனிதா சீசன் 4 ல் இருந்த போது அனிதாவின் கணவர் பிரபா, தனது மனைவி குறித்து அடிக்கடி பதிவுகளை போட்டு இருந்தார். ஆனால், பிக் பாஸ் அல்டிமேட்டின் போது எந்த பதிவையும் போடவில்லை. இப்படி ஒரு நிலையில் இன்று இறுதி போட்டி நடக்க இருக்கும் வேளையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ள அவர் ‘நீ சிறப்பாக விளையாடினாய் கன்னுகுட்டி, உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு. வேடிக்கை பார்த்தவனுக்கு ஒரு வரி கூட கிடையாது, வாழ்க்கை புத்தகத்தில்’ என்று பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸுக்கு பின் அனிதா :
சமீபத்தில் பிக் பாஸில் இருந்து வெளியேறிய அனிதா, ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் ‘நீங்கள் கவலைப்படாதீர்கள், இந்த சமூகத்தில் இருக்கும் சில போலியான நபர்கள் ஒரு பெண் தைரியமாக பேசுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.’ என்று கூறி இருந்தார். இதற்கு அனிதா சம்பத், இந்த உலகத்தில் ஒரு பெண் சத்தமாக பேசவே முடியாது. இந்த உலகிற்கு எப்போதும் மென்மையாக சிரித்து பேசும் பெண்ணை தான் பிடிக்கும். நாம் இந்த நவீன உலகத்தில் இன்னும் பின்தங்கி தான் இருக்கிறோம். நாம் எப்போதும் பூ, மயில் நிலாவாக இருக்கலாமே தவிர புலி , சிங்கம், சூரியனாக இருக்க முடியாது என்று கூறி இருந்தார்.
அனிதாவின் குடும்பத்தினர் என்ன சொன்னார்கள் :
அதே போல மற்றொரு ரசிகர் ‘வீட்டுக்கு வந்ததும் உங்கள் குடம்பத்தினர் எப்படி உணர்ந்தார்கள். ஏனென்றால் உங்கள் எலிமினேஷன் நியாயமே இல்லை’ என்று கூறிஇருந்தார். அதற்கு பதில் அளித்த அனிதா ‘அவர்களும் ஷாக் தான் ஆனார்கள். ஆனால், நான் விளையாடியது அவர்களுக்கு மகிழ்ச்சி தான். என்னுடைய தைரியத்தை பார்த்து பெருமையடைந்தார்கள். ‘நான் வீட்டிற்கும் குழந்தை போல் விளையாடியதை பார்த்து மகிழ்ச்சியடைந்தார்கள்’ என்று கூறி இருந்தார் அனிதா.