புருஷன் பேர சொன்னதுக்கே கத்திய அனிதா – ஆனால், இவரோட மனைவிய பத்தி என்ன பேசியுள்ளார் பாருங்க.

0
73603
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 11 வாரத்தை நிறைவு செய்து 12 வாரத்தில் சென்று கொண்டு இருக்கிறது. நேற்றய நிகழ்ச்சியில் ‘மாட்னயா நீ ‘ என்ற டாஸ்க் ஒன்று கொடுக்கப்ட்டு இருந்தது. இதில், இதில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு சீட்டை தேர்ந்தெடுத்து அதில் இருக்கும் கேள்வியை கேட்க வேண்டும். இப்படி ஒரு நிலையில் ஷிவானி, ஆரியிடம் ‘இந்த வீட்டில் யார் Demotivated -அ இருகாங்கனு நீங்க feel பண்றீங்க என்று கேட்டிருந்தார்’ அதற்கு ஆரி, அனிதாவின் பெயரை சொல்லி, எங்க வீட்டில் என்ன நினைத்தகொள்வார்கள் என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டு அனிதாவின் கணவர் பிரபா பெயரை சொல்ல ஆரம்பித்தார் .

-விளம்பரம்-

ஆனால், ஆரி இப்படி பேசி முடித்ததும் அனிதா, என்னுடைய அம்மா, அப்பா, குடுமபத்தினர் பற்றி பேசாதீர்கள் என்றுகூறி இருந்தார் . அதற்கு ஆரி, நான் பேசி முடித்த பிறகு தான் முடியும் நான் என்ன சொல்ல வந்தேன் என்று கூற, அதற்கு கடுப்பான அனிதா , நீங்கள் சொல்லி முடிக்கும் வரை எல்லாம் காத்திருக்க முடியாது. நான் மட்டும் தான் இங்கே விளையாட வந்திருக்கிறேன். எனவே, என்னை பற்றி மட்டும் பேசுங்கள்.

- Advertisement -

குடும்பத்தில் இருப்பவர்களை பற்றி கமல் சார் பேச வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் என்று கூறிய அனிதா, ஒரு கட்டத்தில் என் புருஷன் பற்றியும், அம்மா அப்பா பற்றியும் பேசாதீர்கள் ஆரி, என்று கையை நீட்டி உதட்டை கடித்து எச்சரிக்கை செய்து இருந்தார் அனிதா. அதன் பின்னர் ஆரி, பேசுவதையே நிறுத்திவிட்டார். அனிதாவின் இந்த செயலை பலரும் விமர்சித்து வந்தனர். நேற்றய நிகழ்ச்சியில் இந்த விஷயம் தான் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது.

இப்படி தன் புருஷன் பெயரை சொன்னதற்கே ஆரியிடம் இவ்வளவு கோபப்பட்ட அனிதா, ரியோ மனைவி குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் ரியோ குறித்து செய்தி வாசிக்கும் அனிதா, எப்போ பாத்தாலும் சுருதி கிட்ட அடிவாங்கிட்டே இருக்கும் ரியோ, இப்போ பாத் ரூம் தான் கழுவிக்கொண்டு இருக்கிறார் என்று கூறியுள்ளார். இந்த விடியோவை பகிர்ந்து பலர் அனிதாவிற்கு வந்த ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்று கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement