நீங்க மட்டும் தான் இப்படி பண்றீங்க – மத்தவங்க எல்லாம் பிக் பாஸ மறந்துட்டாங்க – ரசிகரின் கமென்டிற்கு அனிதா பதிலடி.

0
4666
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

-விளம்பரம்-

அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அனிதா சம்பத் தனது சமூக வளைத்தளத்தில் நபர் ஒருவர் தனக்கு தொடர்ந்து அவதூறாக மெசேஜ் செய்து வருவதாக கூறி அந்த நபரின் புகைப்படத்தை பதிவிடுள்ளார். அனிதா சம்பத் பிக் பாஸுக்கு பின் வெளியேறிய சில நாளில் அவரது தந்தை காலமானார்.

- Advertisement -

அதன் பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த அனிதா சமபத் ஒரே சமயத்தில் அப்பாவின் இறப்பு மற்றும் சமூக வலைதளத்தில் வரும் விமர்சனங்களை எதிர்கொள்ள முடியவில்லை என்று மிகவும் வேதனையோடு ஆரியிடம் தெரிவித்து இருந்தார். மேலும், பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்.

சமீபத்தில் அனிதா சம்பத், சுரேஷ் ஆகியோர் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். அந்த வீடியோவை பகிர்ந்த அனிதா சம்பத், இந்த வீடியோ அனைத்தையும் சொல்லும்.நிகழ்ச்சியில் என்ன என்ன நடந்தாலும் அது தற்காலிகம் தான். உண்மையான உறவு வாழ்க்கை முழுதும் தொடரும். லவ் யூ தத்தா என்று சுரேஷ் சக்ரவர்த்தியை டேக் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர் யாரும் இப்படி பண்றது இல்ல . நீங்க மட்டும் தான் பிக் பாஸ் முடிஞ்ச அப்புறமும் அத பத்தி பேசுறீங்க என்று பதிவிட்டார். அதற்கு அனிதா சம்பத் ஆமாம், பன்றேன் என்ன இப்போ என்று கமன்ட் செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement