சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள அனிதா சம்பத் . எந்த சேனல் ? என்ன சீரியல் தெரியுமா ? இதோ புகைப்படம்.

0
4855
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

-விளம்பரம்-

அதிலும் அர்ச்சனா, நிஷா, அனிதா, சம்யுக்தா போன்ற பெண்போட்டியாளர்களை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாக விமர்சித்து வந்தனர். அனிதா சம்பத் பிக் பாஸுக்கு பின் வெளியேறிய சில நாளில் அவரது தந்தை காலமானார்.மேலும், பிக் பாஸுக்கு பின் அனிதா சம்பத் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை. தன்னுடைய சமூக வலைதளத்தில் மட்டும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் அளித்து வருகிறார்.

இதையும் பாருங்க : மணிவண்ணன் மறைவால் அவரது மனைவிக்கு ஏற்பட்ட நிலை. ஓர் மனதை உலுக்கும் சம்பவம்.

- Advertisement -

அதே போல தன்னுடைய யூடுயூப் பக்கத்தில் மட்டும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அனிதா சம்பத் செய்தி வாசிப்பாளராக பணிபுரியவில்லை என்றாலும் விஜய் தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் சீரியலிலும் என்ட்ரி கொடுத்துள்ளார் அனிதா சம்பத்.

சமீப காலமாக தொலைக்காட்சி சீரியல்களில் பிக் பாஸ் பிரபலங்கள் பலர் கெஸ்ட் ரோலில் வந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர். யாஷிகா துவங்கி சோம், சம்யுக்தா என்று பல பிக் பாஸ் பிரபலங்கள் அடிக்கடி சீரியல்களில் கெஸ்ட் ரோலில் விசிட் அடித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் அனிதாவும் சீரியலில் கெஸ்ட் ரோலில் விசிட் அடிக்க இருக்கிறார். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சில்லுனு ஒரு காதல்’ சீரியலில் தான் அனிதா கெஸ்ட் ரோலில் வர இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement