கடந்த சீசன் ‘We Are The Boysu’ போல அனிதாவுக்கு வந்துள்ள டி-ஷர்ட். எல்லாம் அவர் புருஷன் வேலையா தான் இருக்கும்.

0
15881
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் 66 நாட்களை கடந்து விட்டது. இதுவரை 6 பேர் வெளியேறிய நிலையில் இன்னும் 12 பேர் அப்படியே இருக்கின்றனர். இந்த வாரம் சோம் சேகர், கேப்ரில்லா, ஷிவானி, நிஷா, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளார்கள். இந்த சீசன் கடந்த சீசன்களை விட சுவாரசியமாக இல்லை என்பது தான் பலரின் கருத்து. அதே போல இந்த சீசனில் உள்ள பல போட்டியாளர்களும் கடந்த சீசன்களில் போட்டியாளர்கள் செய்த அனைத்தையும் காப்பி அடித்து அதே போல தான் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Big Boss We Are The Boys'u Hoodies (Unisex) | Lazada

என்னதான் 4 சீசன் வந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீசன் என்றால் 1 மற்றும் 3வது சீசன் தான். கடந்த சீசன் மிகப்பெரிய ஹிட் அடித்ததற்கு காரணம் சாண்டி மற்றும் கவின் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் சாண்டியுடன், கவின் லாஸ்லியா முகேன், தர்சன் என்று அனைவரும் இணைந்து பிக் பாஸ் வீட்டில் ‘We are The Boysu’ என்று கேங்கையும் ஆரம்பித்தனர். ஆனால், தற்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கேங்கை போல் அல்லாமல் இந்த கேங் அனைவருக்கும் பிடித்தமான ஒரு கேங்காக தான் இருந்தது.

- Advertisement -

அதே போல சாண்டி அடிக்கடி கூறிய ‘குருநாதா’ என்ற வார்த்தையும் அப்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்த சாண்டிக்கு சாண்டியின் மனைவி தான் குருநாதா என்று எழுதப்பட்டு இருந்த டி-ஷர்டை அனுப்பி வைத்தார். அதன் பின்னர் ‘We are The Boysu’ என்ற வாசகம் எழுதிய டி-ஷர்டையும் அனுப்பி வைத்தார். ஒருகட்டத்தில் கவின், லாஸ்லியா, தர்ஷன், முகேன், ஷெரின் என்று பலரும் இந்த டி-ஷர்டை அணிந்து பிக் பாஸ் வீட்டில் கெத்து கட்டினார்கள்.

தற்போது இதே ரூட்டை இந்த சீசனில் பாலோ செய்துள்ளார் அனிதா. ஆம், இன்று வெளியான ப்ரோமோவில் அனிதா ஒரு டி-ஷர்டை அணிந்து இருந்தார். அந்த டி-ஷர்டில் ‘my dear kannukutty’ என்று எழுதப்பட்டு இருந்தது. இதை பார்க்கும் போது அனிதாவின் கணவர் தான் இந்த டி-ஷர்டை அனுப்பி இருப்பார் என்று தொன்றுகிறது. ஏனென்றால் தனது கணவர் தான் தன்னை கன்னுகுட்டி என்று செல்லாமாக அழைப்பார் என்று அனிதா கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement