ட்விட்டரில் உடலை பற்றி விமர்சித்த நபர்.! தந்திரமாக நேரில் வரவழைத்து வெளுத்து வாங்கிய டாப்ஸி.!

0
1134

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை டாப்ஸி. தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன் பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும்,தமிழ் தெலுங்கு மலையாளம் என்று பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டீவாக இருக்கும் டாப்ஸி தன்னை விமர்சனம் செய்யும் நபர்களுக்கு முக்குடைப்பது போன்ற பதிலகளை கொடுத்து விடுவார். அப்படி சில வாரங்களுக்கு முன்னர் நடிகை டாப்ஸி புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதையும் பாருங்க : நீலிமா ராணியா இப்படி மோசமான ஆடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.! ரசிகர்கள் ஷாக்.! 

- Advertisement -

அந்த புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் உங்கள் உடல் மீது எனக்கு விருப்பம் என்று பதிவிட்டார். இதற்கு பதிலடி கொடுத்த டாப்சி எனக்கு மூளையில் ஒரு பகுதியை பிடிக்கும் என்று பதில் அளித்திருந்தார். இந்த நிலையில்
டாப்சி கலந்து கொள்ளும் டி.வி நிகழ்ச்சியொன்றுக்கு சமூக விஷயங்கள் பற்றி பேச வேண்டும் என்று சொல்லி அந்த நபரை அழைத்து வந்தனர். டாப்சி நிகழ்ச்சிக்கு வருகிறார் என்று அவரிடம் சொல்லவில்லை.

நிகழ்ச்சி டாப்ஸி வருகிறார் என்று தெரியாமல் சென்ற அந்த நபர் டாப்ஸியை கடந்தும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அந்த நபரை கண்டதும் கோபமடைந்த டாப்ஸி, நடிகைகள் என்றால் கேவலமாக நினைத்து விட்டீர்களா. அவர்களை பற்றி சமூக வலைத்தளத்தில் என்ன வேண்டுமானாலும் பதிவிடுவீர்களா? எங்களுக்கும் குடும்பம் வாழ்க்கை என்று இருப்பது தெரியாதா?

-விளம்பரம்-

பின்னர் அந்த நபரும் இனிமேல் உங்களை பற்றி கேவலமாக பேசமாட்டேன் என்று சொல்லி டாப்சியிடம் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவத்தால் அந்த நிகழ்ச்சியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement