பிக் பாஸ் ஒன்னும் குக்கு வித் கோமாளி கிடையாது – அனிதா சம்பத்தின் உருக்கமான பதிவு.

0
28011
anitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் சமீபத்தில் தான் நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆண் போட்டியாளர்களை விட பெண் போட்டியாளர்கள் தான் மிகவும் விமர்சிக்கப்பட்டார்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, சுச்சித்ரா, சம்யுக்தா என்று பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிதும் சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டனர். அவர்களை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினரை கூட கேலி மற்றும் ட்ரோல் என்ற பெயரில் அதிகம் விமர்சித்தனர். இதனால் ஒரு சில போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பேட்டிகளில் கூட பங்கேற்கவில்லை.

-விளம்பரம்-
anitha

இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்தும் அதனை மக்கள் எப்படி இட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அனிதா சம்பத் தனது சமூக வலைதளத்தில் கூறி வேண்டுகோளையும் வைத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பாக அனிதா சம்பத்திற்கு சமூக வளைத்தளத்தில் ஹேட்டர்ஸ் என்பது இருந்ததா இல்லையா என்ற அளவிற்கு தான் இருந்தது ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் பங்குபெற்ற சில நாட்களிலேயே இவர் சமூக வலைதளத்தில் பெரும் ஹேட்டர்ஸ்களை சம்பாதித்தார்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் எந்த பேட்டியிலும் பங்குபெறாத அனிதா சம்பத், சமூக வளைத்தளத்தில் மட்டும் பதிவுகளை பகிர்ந்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் முடிந்துவிட்டது எனவே பெண் போட்டியாளர்களை அவதூறாக பேச வேண்டாம். அனைத்து பெண்களையும் மதிப்பது நம் அனைவரின் கடமை. எனவே, இதுபோன்ற செயல்களை நிறுத்துங்கள் என்று ரம்யா பாண்டியனின் ரசிகர் பக்கம் ஒன்று பதிவிட்டு இருந்தது. இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ள அனிதா சம்பத், ஆம் இது ஒரு விளையாட்டு மட்டும்தான். அது முடிந்துவிட்டது. தினமும் நாம் 18 போட்டியாளர்களுடன் இருக்க மாட்டோம். அதனால் அப்படி ஒரு அழுத்தமான சூழல் தினமும் அனைவருக்கும் இருக்காது. எனவே, அங்கே வெளிப்பட்ட குணங்கள் அனைவருக்கும் தினமும் வெளிப்படாது. ஒரு அழுத்தமான சூழலில் தான் அனைவருமே உணர்ச்சிவசப்பட்டோம்.

எண்ணற்ற போட்டியாளர்கள் அதிலும் குறிப்பாக பெண் போட்டியாளர்கள் எதிர்மறையான கமெண்ட்டுகளால் மிகவும் அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். கேலி செய்பவர்கள் இதன் மூலம் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க போவது கிடையாது. ஒரு மெசேஜ் போட்டுட்டு நீங்க வேற வேலை பார்க்க போயிடுவீங்க. ஆனால், அந்த மெசேஜய் பாக்குறவங்க மனதை விட்டு போகாது ரொம்ப காலம் அது அவர்களை பாதிக்கும். எல்லாரும் அவங்கவங்க தவறிலிருந்து பாடம் கத்துப்பாங்க. மாத்திப்பாங்க. பிக்பாஸ் ஒன்றும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி கிடையாது. ஒவ்வொரு கணமும் நீங்கள் பிக் பாஸ்ஸை என்ஜாய் பண்ண முடியாது. ஒரு விளையாட்டா மட்டும் பாருங்க. அனைத்து போட்டியாளர்களும் அவர்கள் குடும்பத்தாருடன் வாழ்க்கையை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement