திருநங்கைகளுக்காக அனிதா சம்பத் செய்த விஷயம் – பாராட்டும் நெட்டிசன்கள். என்ன தெரியுமா ?

0
379
anitha
- Advertisement -

சமீபத்தில் அனிதா சம்பத் திருநங்கைகளுக்கு ஆனா மேக்கப் செமினார் என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பிரபலமான இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத்.அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். மேலும் சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் நடித்திருந்தார் அனிதா சம்பத்.

-விளம்பரம்-
anitha

இவருக்கென்று சமூகவலைதளத்தில் ரசிகர் பட்டாளமும் இருந்தது இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி இடம் இவருக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தார் அனிதா சம்பத். மேலும், இவர் பல்வேரு சர்ச்சைகளிலும் சிக்கினார். இப்படி ஒரு நிலையில் இவர் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கூட பங்கேற்று இருந்தார். இந்த முறை அனிதா சம்பத்தின் பெயர் அதிகமாக டேமெஜ் வாங்கியது.

- Advertisement -

பிக் பாஸுக்கு பின் அனிதா கூறியது :

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அனிதா. இந்த உலகத்தில் ஒரு பெண் சத்தமாக பேசவே முடியாது. இந்த உலகிற்கு எப்போதும் மென்மையாக சிரித்து பேசும் பெண்ணை தான் பிடிக்கும். நாம் இந்த நவீன உலகத்தில் இன்னும் பின்தங்கி தான் இருக்கிறோம். நாம் எப்போதும் பூ, மயில் நிலாவாக இருக்கலாமே தவிர புலி , சிங்கம், சூரியனாக இருக்க முடியாது என்று கூறி இருந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை தனது கணவர் பற்றி பக்கம் பக்கமாக பேசி இருந்தார் அனிதா சமபத்.

புதிய வீடு வாங்கி கனவை நிஜமாக்கினார் :

அதன் பிறகு சமீபத்தில் அனிதா சம்பத் புதிய வீடு ஒன்று வாங்கி உள்ளார் அந்த வீட்டின் ஹோம் டோர் வீடியோ காட்சிகள் கூட தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அனிதா சம்பத்திற்கு வீடு வாங்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவு என்பது அவரது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். பிக் பாஸ், ரியாலிட்டி ஷோக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனிதா சம்பத் பல மேடைகளில் தங்களுக்கு என்று சொந்தமாக வீடு வாங்குவது தங்களுடைய பல நாள் கனவு என்று குறிப்பிட்டு இருப்பார். தற்போது அந்த கனவையும் நிஜமாக்கி இருக்கிறார் அனிதா சம்பத்.

-விளம்பரம்-

அடுத்த கனவு இன்டர்நேஷனல் டூர் :

அதன் பிறகு ஏராளமான ஆசைகளை கனவுகளையும வைத்திருந்த அனிதா சம்பத் வீடு காக்கும் கனவை நிஜமாக்கிய பின். தன்னுடைய அடுத்த கனவை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்து விட்டார். ஆம் தற்போது அனிதா சம்பத் இன்டர்நேஷனல் டூர் சென்றுள்ளார் மேலும் மலேசியா சென்றுள்ள அனிதா சாம்பார் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டு எங்களது கல்யாண நாளில் ஒன்றாக வெளிநாட்டில் காலடி எடுத்து வைத்து வேண்டும் என்று நினைத்தோம் . ஆனால் தனித்தனியாக வீசா கிடைத்து தனித்தனியாக வந்துள்ளோம் இருந்தாலும் மகிழ்ச்சியே என்ன பகிர்ந்து இருந்தார்.

திருநங்கைகளுக்கு செமினார் :

இந்நிலையில் சமீபத்தில்தான் அனிதா சம்பத் அவர் திருநங்கைகளுக்கான “TRANS-FORM – FREE ONEDAY MAKEUP & HAIRSTYLE SEMINER” என்ற நிகழ்ச்சியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸில் மூலம் பிரபலம் அடைந்த நமிதா மாரிமுத்து மற்றும் நடிகை சகிலா அவர்களின் வளர்ப்பு மகளான மிளா என்பவரும் இந்த நிகழ்ச்சி மாடல்களாக வந்திருந்தனர். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ” பலரின் உதவியோடு தான் இது சாத்தியமாயிற்று அவர்கள் அனைவருக்கும் நன்றிகள். இதை தொடர்ச்சியாக செய்யனும் ,மேலும் பல திருநங்கைகளுக்கு இது உதவணும்ங்குறது தான் எங்க எல்லாரோடையும் ஆசையும்” என்று அந்த செமினாரில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் தன

Advertisement