வெளியேறிய அனிதா-பாகுபலி அனுஷாகவுடன் ஒப்பிட்டு அனிதா கணவர் போட்ட பதிவு.

0
45497
Anith

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்கள் பற்றிய நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது . விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 83 நாட்களை கடந்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் இன்னும் ஒன்பது பேர் அப்படியே இருக்கிறார்கள். ஆனால், இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது.

அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை. இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடிப்படையில் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா, அனிதா, சம்பத் ஆகியோர் நாமினேட் ஆகியிருந்தார்கள். எனவே, இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும், இந்த வாரம் அனிதா சம்பத் அல்லது ஆஜித் ஆகிய இருவரில் வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் பல்வேறு தனியார் வலைதள பக்கங்களில் நடைபெற்றுவரும் வாக்கெடுப்பில் அனிதா சம்பத்திற்கு தான் மிகவும் குறைவான வாக்குகள் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தது போல அனிதா தான் இந்த வாரம் வெளியேறி இருந்தார். உண்மையில் இந்த வாரம் ஆஜீத் அல்லது ஷிவானி தான் வெளியேற்றப்புடுவார்கள் தான் என்று எதிர்ப்பிற்கப்படது.

ஆனால், அனிதா கடந்த வாரம் ஆரி, பாலாஜி போன்றவர்களுடன் செய்த வாக்குவாதத்தில் தான் வெளியேறினார் என்று பலரும் கூறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த தனது மனைவிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனிதாவின் கணவர், பாகுபலி படத்தில் வரும் அனுஷாவின் கதாபாத்திரத்தை குறிப்பிட்டு ‘என் தேவசேனா வந்துவிட்டால்’ என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement