பிக் வீட்டின் இந்த வார தலைவர் இவர் தான் – மாஸ்டர் பிளான் போட்டு இந்த வாரமும் இவரை காப்பற்றிய பிக் பாஸ்.

0
953
1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 61 நாட்களை நிறைவு செய்து இருக்கிறது. இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா ஆகியோர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று (டிசம்பர் 6) சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் ஆரி, ஆஜீத், அனிதா, ரம்யா பாண்டியன், ஷிவானி, நிஷா, சனம் ஷெட்டி ஆகியோர் இடம்பெற்றனர். இந்த வாரம் ஆஜீத், ஷிவானி, நிஷா, அனிதா ஆகிய யாரவது 4 பேரில் ஒருவர் தான் நிச்சயம் வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் பலரும் எதிர் பார்த்தனர்.

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டு இருந்தார்.மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை விமர்சனம் சிட்டியில் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே சனம் ஷெட்டியை விட நிஷா, ஷிவானி, ஆஜித் போன்றவர்கள் எந்த விதத்தில் சிறந்த போட்டியாளர்களாக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இருப்பினும் சனம் ஷெட்டி வெளியேறிய போது மற்ற போட்டியாளர்களை அனைவருமே அவரை மிகவும் நன்றாக வழி அனுப்பி வைத்தார்கள்.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற இருக்கிறது. ஆனால், இந்த வாரத்திற்கான நாமினேஷனை கடந்த வாரமே பிக் பாஸ் காலர் டாஸ்க் மூலம் நடத்தி முடித்துவிட்டார். அதன் அடிப்படையில் பாலாஜி, அர்ச்சனா, ரம்யா பாண்டியன், அனிதா, ஷிவானி, ரியோ ஆகிய சிலர் இந்த வாரம் நாமினேஷனில் இடம் பெற்று இருக்கின்றனர்.

எனவே, இந்த வாரம் கண்டிப்பாக போட்டிகள் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த வாரத்திற்கான தலைவர் போட்டியில் அனைவரையும் பங்குபெற செய்துள்ளார் பிக் பாஸ். இதில் அனிதா வெற்றி பெற்று இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த வாரமும் காப்பாற்றப்பட்டுள்ளார். இதை எல்லாம் வைத்துப்பார்க்கும் போது அனிதாவை திட்டம் போட்டு பிக் பாஸ் காப்பற்றுவது போல தான் இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement