‘என் குடும்பம் இப்போது நிறைவடைந்து விட்டது’ – இரண்டாம் குழந்தைக்கு தந்தையான மகிழ்ச்சியில் ஆரவ் போட்ட பதிவு.

0
3025
- Advertisement -

பிக் பாஸ் பிரபலம் ஆரவ் மீண்டும் தந்தையாகியிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியில் பிக் பாஸ் ஒன்று இந்த நிகழ்ச்சி இதுவரை ஆறு சீசன்களை கடந்து தற்போது ஏழாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இருந்தாலும், முதல் சீசன் தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சீசன் ஆக இருக்கிறது. இந்த முதல் சீசனில் பங்குபெற்ற பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவில் நடிகர் நடிகைகளாக ஜொலித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் நடிகர் ஆரவ்வும் ஒருவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்கு முன்பாகவே இவர் “ஓ காதல் கண்மணி, சைத்தான்” போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடிப்பில் வெளியாகி இருந்த மார்க்கெட் ராஜா, ராஜபீமா போன்ற படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து கடந்த ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியிருந்த படம் கலகத்தலைவன்.

- Advertisement -

ஆரவ் திரைப்பயணம்:

இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கி இருந்தார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக இந்த அகர்வால் நடித்து இருந்தார். பிசாசு படத்தின் இசை அமைப்பாளர் அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்தது. இந்த படத்தில் ஆரவ் வில்லனாக மிரட்டி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனை அடுத்து தற்போது ஆரவ் அவர்கள் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்கிறார்.

ஆரவ் குடும்பம்:

இந்த படத்தில் தல அஜித் ஹீரோவாக நடிக்கிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களும் விடாமுயற்சி படம் குறித்த அப்டேட்டிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனிடையே ஆரவ் அவர்கள் நடிகை ராஹி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான ‘இமை போல் காக்க’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிகை ராஹி நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

ஆரவ் குழந்தை:

மேலும், நடிகர் ஆரவ் மற்றும் ராஹியின் திருமணம் சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், சரண், ரஞ்சித் ஜெயக்கொடி, வருண், ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதே போல ஆரவ்வுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்த பிந்து மாதவி, சக்தி, சினேகன், கணேஷ் வெங்கட் ராமன், ஆர்த்தி கணேஷ், காயத்ரி ரகுராம் சுஜா வருணி என்று பலர் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள். அதே போல திருமணம் முடிந்து சில மாதங்களில் கர்ப்பமான ஆரவ் மனைவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

மீண்டும் தந்தையான ஆரவ்;

இந்த நிலையில் ஆரவ் மீண்டும் தந்தையாகி இருக்கும் தகவல் தான் தற்போது வைரலாகி இருக்கிறது. ஏற்கனவே இவருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை இருக்கிறது. இதனை அடுத்து தற்போது இவர் மீண்டும் இரண்டாவது முறையாக தந்தையாகியிருக்கிறார். இது தொடர்பாகத்தான் ஆரவ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய குடும்பம் முழுமை அடைந்து விட்டது. எனக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறோம். குழந்தையும், தாயும் நலமாக இருக்கிறார்கள் என்று உணர்வுபூர்வமாக பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆரவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement