Home பொழுதுபோக்கு சமீபத்திய

சித்தியுடன் சேர்ந்து ‘மாமதுரை’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட அர்ச்சனா மகள் – குவியும் கமெண்ட்ஸ்.

0
99
-விளம்பரம்-

தமிழில் 90 ஸ்களில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் இருந்து ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா. அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

மேலும் அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தொடர்ந்து தனது தொகுப்பாளினி பணியை செய்து வந்த அர்ச்சனா. கடந்த 2004 ஆம் ஆண்டு வினித் முத்துகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் அர்ச்சனா தொலைக்காட்சியில் இருந்து விலகி இருந்தார். மேலும், நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ச ரி க ம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.

அதனை தொடர்ந்து அர்ச்சனாவும் அவரது மகள் சாராவும் சேர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் மாம்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து இருந்தது. அதே போல கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்திலும் அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் நடித்து இருந்தனர். என்னதான் இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் இருந்தாலும் ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

View this post on Instagram
-விளம்பரம்-

A post shared by Anita Chandhoke (@anita_chandhoke)

அதிலும் குறிப்பாக அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர் தான் அவருக்கு ஹேட்டர்ஸ்கள் உருவாகினர்கள். தற்போது சாராவும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பங்கேற்று வருகிறார். அதே போல படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் சாரா. இருந்தாலும் சாராருடைய செயல்களை குறித்து சோசியல் மீடியாவில் பலரும் விமர்சித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சமீபத்தில் தன் மீது வைக்கப்படும் மெச்சூரிட்டி கமெண்டுகள் குறித்து பேசிய சாரா ‘ஒரு தரப்பு எனக்கு போதுமான மெச்சூரிட்டி இல்லை என்றும் இன்னொரு தரப்பு அதிகமான மெச்சூரிட்டி இருக்கிறது என்று என்னை தவறான வார்த்தைகளை கொண்டு ட்ரோல் செய்தனர். மெச்சூரிட்டி என்பது வாழ்க்கையின் சூழ்நிலைகளுடன் நேரடித் தொடர்பை கொண்டது. என்னுடைய மெச்சூரிட்டி மற்றும் மெச்சூரிட்டி இல்லாத தன்மை என்பது சமாளிக்கும் அளவிலேயே இருக்கிறது.

என்னுடைய குணத்தை தாக்கி பேசுகிறீர்கள். கொஞ்சமாவது ஒரு நிமிடம் நின்று யோசித்து பாருங்கள். இது என்னையும், என்னுடைய குடும்பத்தின் மனநலத்தையும் எந்தளவு பாதிக்கும் என்று கூறி இருந்தார். இப்படி தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்ந்தாலும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாரா அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது சித்தியுடன் இணைந்து ‘மாமதுரை’ பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news