வனிதாவுடன் புகைப்படத்தை வெளியிட்ட அர்ச்சனா – எங்க மீட் பண்ணி இருக்காங்க பாருங்க (சரியான ஜோடி தான்)

0
3891
archana
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது. இந்த சீசனில் ஆரி, ரியோ ராஜ், ஜித்தன் ரமேஷ் ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா, ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் ,வேல்முருகன், அனிதா சம்பத், கேப்ரில்லா, ஆஜித்,சுசித்ரா, ரேகா, சோம் சேகர் என்று 18 பேர் இந்த சீசனில் கலந்து கொண்டனர். இந்த சீசன் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்திருந்தனர். முதல் இடத்தை பிடித்த ஆரிக்கு 50,00,000 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

-விளம்பரம்-

இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டார்கள்,அதில் பிரபல தொகுப்பாளினியாக அர்ச்சனாவும் ஒருவர். ஆரம்பத்தில் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த அர்ச்சனா கடந்த சில வருடங்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதே போல இவர் முதன் முதலில் காமெடி டைம், இளமை புதுமை போன்ற நிகழ்ச்சியில் பணியாற்றினார்.

இதையும் பாருங்க : நாய் கடிச்சி கொதர்ன மாதிரி இருக்கு. தன் ஆடையை கேலி செய்தவர்களுக்கு கேபி கொடுத்த பதிலடி.

- Advertisement -

பெப்சி உமாவிற்கு பிறகு சன் தொலைக்காட்சியில் பிரபலமான பெண் தொகுப்பாளனி என்றால் அது அர்ச்சனா என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இவர் தொகுத்து வழங்கிய இளமை புதுமை நிகழ்ச்சி அன்றைய 90ஸ் கிட்ஸ்களின் ஒரு பேவரைட் நிகழ்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். இப்படி ஒரு நிலையில் அர்ச்சனா, வனிதாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் 4 சீசனில் எப்படி அர்ச்சனா பலரால் விமர்சிக்கப்பட்ட ஒரு போட்டியாளராக இருந்தாரோ அதே போல பிக் பாஸ் 3யில் பலரால் விமர்சிக்கப்பட்ட போட்டியாளராக திகழ்ந்தார் வனிதா. பிக் பாஸுக்கு பின்னரும் இவரது மூன்றாம் திருமணம் பல மாதங்களாக பரபரப்பாக பேசப்பட்டது. இப்படி ஒரு நிலையில் வனிதா மற்றும் அர்ச்சனா இருவரும் சமீபத்தில் ரேகாவின் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுள்ளார்கள். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை அர்ச்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement